Advertisment

விபத்தில் சிக்கிய கணவர்... இரண்டு நிமிடத்தில் ஏழ்மை பெண்ணுக்கு அடித்த ஜாக்பாட்!

கணவன் விபத்தில் சிக்கியதால் வறுமையால் குடும்பம் நடத்த கஷ்டப்பட்ட பெண்ணுக்கு இரண்டு நிமிடத்திற்கு முன்பு வாங்கிய லாட்டரி சீட்டில் 60 இலட்சம் ருபாய் பரிசு கிடைத்துள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள தெற்கே ஆரியநாடு பகுதியை சேர்ந்தவர் லேகா. இவருக்கு வயது 30. இவரது கணவர் பெயர் பிரகாஷ்.இவருக்கு வயது 33. இந்த தம்பதிக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளனர். லாரி டிரைவரான பிரகாஷ் விபத்தில் சிக்கியதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு லாரி ஓட்ட முடியாத நிலையில் இருந்துள்ளார். இதனால் பணிக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் குடும்பம் நடத்த வருமானம் இல்லாமல் இருந்துள்ளனர். வருமானம் ஏதும் இல்லாத சூழ்நிலையில் குடும்பம் வறுமையில் வாடியது. இந்த நிலையில் லேகா தனது கணவர் மற்றும் குழந்தையுடன் தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

Advertisment

kerala

இந்த நிலையில் கொம்மாடி பகுதியில் உள்ள ஒரு லாட்டரிக்கடையில் கேரள அரசு லாட்டரிச்சீட்டுகளை நேற்று முன்தினம் பகல் 2.58 மணிக்கு லேகா வாங்கியுள்ளார். அப்போது அவர் மொத்தம் 12 லாட்டரிச் சீட்டுகளை வாங்கியிருக்கிறார். அவர் லாட்டரி சீட் வாங்கிய இரண்டு நிமிடங்களுக்கு பிறகு பகல் 3 மணிக்கு அந்த லாட்டரிச்சீட்டுகளுக்கான குலுக்கல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் முதல் பரிசு ரூ.60 லட்சம் லேகா வாங்கிய லாட்டரிச்சீட்டுக்கு கிடைத்தது. பரிசு கிடைத்தது பற்றி லேகா கூறும் போது, நான் ஏற்கனவே ஆலப்புழா கலெக்டர் அலுவலகம் அருகில் லாட்டரிச்சீட்டுகள் விற்பனை செய்துவந்தேன். எனது கணவர் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் லாட்டரி விற்பனை செய்ய முடியவில்லை. தற்போது கிடைத்துள்ள பரிசுப்பணம் மூலம் சிறிய வீடு கட்டுவேன். மீண்டும் லாட்டரிச்சீட்டு வியாபாரத்தில் ஈடுபடுவேன்.

Advertisment

family husband lottery PRIZE wife
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe