Skip to main content

பிஎச்டி முடிக்கவேண்டும் என்றால் ஆசைக்கு இணங்க வேண்டும்-மதுரை காமராஜர் பல்கலை துறைத்தலைவர் மீது கேரள இளம்பெண் பரபரப்பு புகார்!!

Published on 09/12/2018 | Edited on 09/12/2018

பிஎச்டி வேண்டுமென்றால் ஆசைக்கு இணங்க வேண்டும் என்று காமராஜர் பல்கலைக்கழகத்தின் துறைதலைவர் மிரட்டுவதாக ஆராய்ச்சி மாணவி ஒருவர் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

 

w

 

கேரளாவில் கல்லூரிப்படிப்பை முடித்த மாணவி ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் திரைப்படம் மற்றும் மின்னணு ஆய்வுகளுக்கான மையத்தில் பிஎச்டி படிப்பில் சேர்ந்துள்ளார். இந்நிலையில் துறை தலைவர் கருணமகாராஜன் மீது புகார் ஒன்றை அளித்துள்ளார். 

 

 

அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த ஒரு வருடமாக காமராஜர் பல்கலைக்கழகத்தின் திரைப்படம் மற்றும் மின்னணு ஆய்வுத்துறை துறை தலைவர் கர்ணமகாராஜா என்பவர் தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி வருவதாக கூறியுள்ளார்.

 

w

 

மேலும் பிஎச்டி பட்டம் வேண்டும் என்றால் 5 லட்சம் ரூ ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று தன்னிடம் கர்ணமகாராஜா வலியுறுத்தியதாகவும், அந்த மாணவி பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார். அப்படி  பணம் கொடுக்க முடியவில்லை என்றால் ஆசைக்கு இணங்குமாறு மிரட்டுவதாகவும், தான் கூறும் நபரை தனிமையில் சந்திக்க வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து அவர் வற்புறுத்தி வந்ததாகவும் அந்த மாணவி புகாரில் கூறியுள்ளார்.

 

w

 

இதனையடுத்து துறைத்தலைவர் மகாராஜா கொடுத்த பாலியல் துன்புறுத்தல் காரணமாக மனநிலை மற்றும் உடல்நிலை பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறிய அந்த பெண் மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் மாணவி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.  தற்போது சிகிச்சை முடிந்த நிலையில் அந்த மாணவி கேரளா புறப்பட்டுச் சென்றுள்ளார்.  மதுரை காமராஜர் யுனிவர்சிட்டி துறைத் தலைவர் மீது சுமத்தப்பட்டுள்ள இந்த பாலியல் குற்றச்சாட்டு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மேலும் பாலியல் வற்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட மாணவி கேரள மாநிலம் கம்யூனிஸ்டை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ ஒருவரின் மருமகள் என்றும் கூறப்படுகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நிர்மலா தேவி வழக்கு; உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Nirmala Devi case; The High Court barrage of questions

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாகக் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதற்காக மாணவிகளிடம் பேரம் பேசியதாக கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது. மேலும் இந்த விவகாரத்தில் அவருக்கு உதவியதாக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரிக்கும் வழக்கை பெண் டிஐஜி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என புரட்சிகர மாணவர்கள் இளைஞர் முன்னணி இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா, நிதிபதி சத்திய நாராயண அமர்வில் இன்று (18.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் வாதிடுகையில், “பாதிக்கப்பட்ட மாணவிகள் கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அமைத்துள்ள விசாக கமிட்டிக்கு அனுப்பி இருக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள், “பாதிக்கப்பட்ட மாணவிகள் கொடுத்த புகாரை 6 ஆண்டுகளாக விசாக கமிட்டிக்கு ஏன் அனுப்பவில்லை. நிர்மலா தேவி வழக்கில் கடந்த 6 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காதது ஏன். இது குறித்து ஜூன் 7 ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்” என மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கும், கல்லூரி நிர்வாகத்திற்கும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

Next Story

மின்னணு வாக்குப்பதிவு குறித்த புகார்; உச்ச நீதிமன்றம் அதிரடி!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Complaint about electronic voting; The Supreme Court is in action

தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் ஒப்புகை சீட்டையும் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ‘ஒப்புகைச் சீட்டு இயந்திரம் கடந்த 2017 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அதில் வெளிப்படையாக தெரியும் கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த ஒப்புகை சீட்டு உள்ளே விழுகிறதா? என்பது கூட வாக்காளர்களுக்கு தெரியவில்லை. ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் உள்ள ஒரு சட்டப்பேரவை தொகுதியில் ஏதாவது 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் ஒப்புகை சீட்டு சரிபார்க்கப்படுகிறது. இது வெறும் இரண்டு சதவீதம் மட்டுமே சரி பார்ப்பாகும். இதிலும் முறைகேடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதனைத் தடுக்க மின்னணு வாக்குப்பதிவை மக்கள் நம்பாத பட்சத்தில் ஒப்புகை சீட்டுகளை அதனுடன் ஒப்பிட்டு எண்ணிக்கை நடத்த வேண்டும்’ என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘இந்தியாவில் வாக்காளர்களின் எண்ணிக்கை 1960ல் 50 லிருந்து  60 கோடிகளில் தான் இருந்தது. ஆனால் தற்பொழுது 97 கோடிக்கு மேல் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் சராசரியாக 65 சதவீதம் பேர் வாக்களிக்கிறார்கள், என்றால் கூட அத்தனை வாக்குகளையும் ஒப்புகை சீட்டுகளையும் எப்படி, எப்போது எண்ணி முடிப்பது? இத்தனை கோடி வாக்கு ஒப்புகை சீட்டுகளை எண்ணி முடிக்க 12 நாட்கள் ஆகும் எனத் தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளது என நீதிபதிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மனுதாரர் தரப்பில், ‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை எந்த விதத்திலும் தவறாக பயன்படுத்த முடியாது எனத் தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது. இதுவரை தவறாக பயன்படுத்தப்படுவதில்லை என்றும் கூறுகிறது. ஆனால் எதிர்காலத்திலும் இவ்வாறு நடக்காது என்று  சொல்ல முடியாது எனவே. 100% ஒப்புகை சீட்டுகளை சரி பார்ப்பதற்கு உத்தரவிட வேண்டும்’ என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு இரண்டாவது முறையாக இன்று (18.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆஜரானார். அவர் அப்போது வாதிடுகையில், “கேரளா மாநிலம் காசர்கோடு சட்டமன்ற தொகுதியில் நடந்த மாதிரி வாக்குப்பதிவில் ஒரு முறை வாக்குப்பதிவு இயந்திரத்தின் பொத்தானை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டுகள் விழுவதாக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். இதனையடுத்து இது குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தை பற்றி பல்வேறு கேள்விகளையும் நீதிபதி எழுப்பியுள்ளனர்.