Kerala Chief Minister Pinarayi Vijayan visits Chennai

Advertisment

தமிழ்நாடு அரசின் சார்பில் வைக்கம் போராட்டம் நூற்றாண்டு சிறப்பு விழா நாளை (28.12.2023) காலை 11.15 மணியளவில் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வைக்கம் போராட்டம் நூற்றாண்டு மலரை வெளியிட்டு உரையாற்றுகிறார்.

மேலும் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், ‘பெரியாரும் வைக்கம் போராட்டமும்’ என்ற நூலை வெளியிட்டு முன்னிலை உரை ஆற்றுகிறார். திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி விழாவில் சிறப்புரையாற்றுகிறார். இவ்விழாவின்போது செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் தயாரித்துள்ள வைக்கம் போராட்டம் குறித்த ஆவணப்படம் திரையிடப்பட உள்ளது. மேலும், பள்ளி மாணவர்கள் சார்பில் சமத்துவக் கொண்டாட்டம் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்த விழாவில் கலந்துகொள்ள கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று (27.12.2023) சென்னைக்கு வருகை தந்துள்ளார். இவரைத்தமிழக அரசு சார்பில்சென்னை விமான நிலையத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆகியோர் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர்.