Advertisment

கேரள கோரிக்கையை ஏற்கமுடியாது!  வைகை அணையை  திறந்து ஒபிஎஸ் பேட்டி!!   

o

தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி அருகே இருக்கும் வைகை அணை தொடர்ந்து பெய்த மழை மூலம் ஏழு ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியதால் அணையில் இருந்து தண்ணீரை மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள விவசாய பாசன வசதிக்காக துணை முதல்வர் ஒபிஎஸ் திறந்து வைத்தார்.

Advertisment

o

அப்பொழுது பத்திரிக்கையாளரிடம் பேசிய ஓபிஎஸ், ’’இந்த வைகை அணையில் இருந்து எப்பொழுதும் அக்டோபர் மாதம் தான் பாசனவசதிக்கு தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். ஆனால் தற்பொழுது தென்மேற்கு மழையினால் இரண்டு மாதத்திற்கு முன்பே தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

Advertisment

o

இது பத்து ஆண்டுகளுக்கு பிறகு இப்படி ஒரு நிகழ்வு நடந்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதுபோல் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து உபரி நீர் இடுக்கி அணைக்கு செல்வதால் அணையின் நீர்மட்டத்தை 139அடியாக குறைக்க வேண்டும் என கேரளா கோரிக்கை வைத்து வருகிறது. அதனை எல்லாம் ஏற்றுக் கொள்ளமுடியாது அணை பலமாக உள்ளது. அதிலும் வல்லுநர்கள் குழுஆய்வு செய்து அணை பலமாக இருக்கிறது என்று சொன்னதின் பேரில் தான் தற்பொழுது 142 அடி தேக்க சுப்ரீம் கோர்ட்டே அனுமதி வழங்கியதின் பேரில் தான்அணையில் தண்ணீர் தேக்கி வருகிறோமே தவிர அணையின் நீர்மட்டத்தை குறைக்க வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறினார். இதில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, உதயகுமார் மற்றும் தேனி திண்டுக்கல் கலெக்டர்களான வினைய், பல்லவி பல்தேவ் மற்றும் அதிகாரிகள் கட்சிகாரர்கள் என பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.

ops
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe