கேரளாவில் காசர்கோடு மாவட்டத்தில் நேற்று இரவு காங்கிரஸ் தொண்டர்களான கிருபேஷ்,சரத்லால் ஆகிய இருவர் கொல்லப்பட்டனர். இதற்கு கம்யூனிஸ்ட் கட்சியினர் தான் காரணம் என குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் கட்சி இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இதையடுத்து கேரளாவில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் அரசுப் பேருந்துகள் களியக்காவிளையில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் மாணவர்கள், வேலைக்குச் செல்வோர் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.