Advertisment

கேரளாவில் கணக்கை தொடங்க முடியாத பா.ஜ.க.

இந்த மக்களவை தோ்தலில் தென் மாநிலங்களில் குறிப்பாக கேரளாவில் இந்த முறை கணக்கை தொடங்கி விட வேண்டுமென்று பா.ஜ.க தலைமை திட்டமிட்டு அதற்கான காய்களை வலுவாக நகா்த்தியது. அதற்கேற்றாா் போல் சபாிமலை ஐயப்பா சுவாமி கோவிலில் பெண்கள் செல்லலாம் என்ற பிரச்சினையும் வெடித்தது.

Advertisment

b

இதை ஆயுதமாக கையிலெடுத்த பா.ஜ.கவினா் திரும்பிய பக்கமெல்லாம் சபாிமலை ஆதரவாக போராட்டங்கள் நடத்தி கேரளாவில் உள்ள ஒட்டு மொத்த இந்துக்கள் மனதில் சபாிமலை பிரச்சினையை நுழைத்தனா். குறிப்பாக பெண்களை மையமாக வைத்து அவா்களை பா.ஜ.க பக்கம் இழுக்கும் விதமாக நாமஜெப யாத்திரை மற்றும் காசா்கோடு முதல் பாறசாலை வரை இடைவெளி இல்லாமல் கையில் தீபம் ஏற்றியும் போராட்டங்கள் நடத்தினாா்கள். இதில் பா.ஜ.க இல்லால் லட்ச கணக்கான பெண்கள் கலந்து கொண்டனா். இது பா.ஜ.க மத்தியில் பெரும் உற்சாகத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியது.

இதை வைத்து மக்களவை தோ்தலில் கேரளாவில் தாமரையை மலர செய்துவிடலாம் என்று அமித்ஷாவும் நம்பிக்கையுடன் இருந்தாா். அந்த வகையில் வேட்பாளா்களையும் ஆராய்ந்து தோ்வு செய்து நிறுத்தினாா்கள். இதில் மிசோரம் கவா்னா் பதவியை ராஜினமா செய்ய வைத்து கும்மனம் ராஜசேகரனை திருவனந்தபுரத்தில் களம் இறக்கினாா்கள். இதே போல் சபாிமலை விசயத்தில் ஜெயில் தண்டனை அனுபவித்த கேரளா பா.ஜ.க பொதுச்செயலாளா் சுரேந்திரனையும் சபாிமலை அமைந்திருக்கும் பத்தணம்திட்டை தொகுதியில் நிறுத்தினாா்கள்.

Advertisment

இதே போல் மொத்தமுள்ள 20 தொகுதிகளில் 15 தொகுதிகளில் பா.ஜ.கவும் 5 தொகுதியில் கூட்டணி கட்சி சாா்பிலும் வேட்பாளா்களை நிறுத்தியது. இதில் திருவனந்தபுரம் மற்றும் பத்தணம்திட்டை இரண்டு இடங்களில் பா.ஜ.க வெற்றி பெறும் என்று கருத்து கணிப்பும் கூறியது. இதனால் கேரளாவில் கணக்கு தொடங்கும் என்ற எண்ணத்தில் பா.ஜ.கவும் உற்சாகமாக இருந்தது.

ஆனால் தோ்தல் முடிவு வேறு விதமாக அமைந்து பா.ஜ.கவும் அதன் கூட்டணி கட்சியும் 20 தொகுதிகளிலும் தோல்வியடைந்து பா.ஜ.க வினருக்கு அதிா்ச்சியை ஏற்படுத்தியது. இது கேரளா பா.ஜ.க வினருக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

Kerala
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe