Advertisment

'கோழிக் குஞ்சுகள், முட்டைகள் வாங்க அனுமதி அவசியம்'- தமிழக அரசு!

கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில் தமிழக- கேரள எல்லையில் கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் சோதனைக்கு பிறகே தமிழ்நாட்டுக்குள் அனுமதிக்கப்படுகிறது.மேலும் சுகாதாரத்துறை ஊழியர்களால் வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.

Advertisment

KERALA BIRD FLU TAMILNADU GOVERNMENT

இந்த நிலையில் பறவை காய்ச்சல் அச்சம் காரணமாக பிற மாநிலங்களில் இருந்து கோழிக் குஞ்சுகள், முட்டைகள் வாங்க அனுமதி பெற வேண்டும் என்று முட்டை உற்பத்தியாளர் ஒருங்கிணைப்புக்குழு, கோழிப் பண்ணையாளர் சங்கத்திற்கு தமிழக அரசுஅறிவுறுத்தியுள்ளது. மேலும் உரிய அரசு அலுவலரிடம் முறையாக சான்றிதழ் பெற்ற பின்னரே கொள்முதல் செய்ய வேண்டும் என்று பல்லடம் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் ஒருங்கிணைப்பு குழுவினரிடம் அரசு அறிவுறுத்தியுள்ளது.

Advertisment

அதேபோல் அனைத்து கோழிப் பண்ணைகளிலும் தீவிர உயிர் பாதுகாப்பு நடைமுறைகளை கையாளவும் அறிவுறுத்தியுள்ளது. பறவை காய்ச்சல் அச்சத்தால் கேரளாவில் இருந்து வரும் இறைச்சிக்கோழி போன்றவை திருப்பி அனுப்பப்படுகிறது.

instruction TamilNadu government BIRD FLU Kerala
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe