Advertisment

சிம்பு,தனுஷ் கூட நடித்த பிரபல நடிகர் இளம் பெண்ணுக்கு ஆபாச மெசேஜ்! 

தமிழில் தனுஷ்,சிம்பு,விஷால் படங்களில் நடித்தவர் கேரள நடிகர் வினாயகன்.தமிழில் திமிரு, சிலம்பாட்டம், மரியான் மற்றும் சில படங்களில் நடித்துள்ளார்.இவர் மிருதுளாதேவி சசீதரன் என்ற இளம்பெண்ணிடம் செல்போனில் தகாத முறையில் சாதீய ரீதியாகவும் பேசியதாக சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அதில் சினிமாவில் நடிகைகள் அவர் மீது நல்ல மதிப்பு வைத்திருந்தாலும், அவர் பர்சனல் வாழ்க்கையில் பெண்களுக்கு எதிராக செயல் படக் கூடியவர்.

Advertisment

actor

எனக்கு அவர் மீது எந்த மதிப்பும் கிடையாது. ஒரு நிகழ்ச்சிக்கு என்னை அழைத்தவர், என்னுடன் தனிமையில் இருக்கப் போவதாகவும், என் தாயும் அவருக்கு தேவை என்றும் கூறினார் என மிருதுளாதேவி சசீதரன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்தார். அவரது பேச்சு செல்போனில் ரெகார்ட் செய்யப் பட்டிருப்பதாகவும் தனது முகநூல் பதிவில் அவர் கூறியிருக்கிறார். ஆனால் இதனை மறுத்த விநாயகன், தாம் ஒரு போதும் சாதிய ரீதியாக பேசுவதோ, அடுத்தவர்களிடம் சாதி பார்ப்பதோ கிடையாது என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அவரை கைது செய்யக்கோரி கேரளாவில் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.இதனால் வினாயகன் மீது 4 பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 506, 294பி, கேபிஏ 120, 120ஓ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisment
actor Kerala message tamilcinema Young Women
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe