Advertisment

கேரளாவில் கலவரத்தால் ஐயப்பனை தரிசிக்காமலேயே வீடு திரும்பும் பக்தர்கள்!

s

Advertisment

கேரளாவில் எதிர்க் கட்சிகளின் பந்த் மற்றும் போராட்டக்காரர்களின் கலவரத்தால் ஐயப்பனை தரிசிக்காமலேயே பக்தர்கள் வீடு திரும்புகிறார்கள்!!

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதை தொடர்ந்து கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கேரளாவில் உள்ள சபரிமலையில் பெண்களுக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் அங்கங்கே நடந்து வருகிறது. அதையும் மீறி கேரளா தமிழகத்தைச் சேர்ந்த பல பெண்கள் ஐயப்பனை தரிசிக்க சபரிமலை சென்றவர்களையும் போராட்டக்காரர்களின் எதிர்ப்பால் திருப்பி அனுப்பி வருகிறார்கள்.

s

Advertisment

இந்த நிலையில்தான் நேற்று கேரளாவைச் சேர்ந்த கனகதுர்கா, பிந்து என்ற இரண்டு பெண்கள் சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசித்து விட்டு வந்தனர். இந்த விஷயம் இந்து அமைப்புகளுக்கும் எதிர்க்கட்சியினருக்கும் தெரிந்ததின்பேரில் கேரளாவில் எதிர்க்கட்சிகள் இன்று பந்து அறிவித்தது. பந்தை ஒட்டி கேரளாவில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் கடைகள் அடைக்கப்பட்டது. இதனால் சபரிமலைக்கு செல்லக்கூடிய ஐயப்ப பக்தர்கள் ஒருவித பீதி உணர்வோடு போய்வருகிறார்கள். இப்படி போகக்கூடிய பக்தர்கள் ஹோட்டல்களில் சாப்பிட முடியாமலும் டீ காபி குடிக்க முடியாமலும் தவித்து வருகிறார்கள். இது சம்பந்தமாக திண்டுக்கல்லில் இருந்து சபரி சாஸ்தா பாதயாத்திரை குழுவை சேர்ந்த அய்யப்ப பக்தர்களிடம் கேட்டபோது, நேற்று இரவு இருமுடி கட்டி அய்யப்பனை தரிசிக்க 50க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் பஸ் மூலம் ஐயப்பனை தரிசிக்க புறப்பட்டு வரும் வழியில் தான் எங்களுக்கு இங்கு பந்த் என்று தெரிந்தது. அங்கங்கே கடைகள் அடைத்தும் பஸ் போக்குவரத்து இல்லாமல் இருந்து வந்தது.

s

அதிகாலையில் எரிமலைக்கு நாங்கள் வந்து எரிமேலியில் உள்ள எருமேலியில் பேட்டை சென்று பாபாவை தரிசித்து விட்டு காலை டிபனை முடித்துக் கொள்ளலாம் என்று பார்க்கும்போது எரிமேலியில் கடைகள் இல்லாமல் அனைத்து கடைகளும் பந்த்தை முன்னிட்டு பூட்டி கிடந்தன. இதனால் காலை டிப்பன் சாப்பிட முடியாமலும் டீ, காபி கூட குடிக்க முடியாமலும் பட்டினியாகத் தான் அங்கிருந்து புறப்பட்டு ஐயப்பனை தரிசிக்க பம்பை செல்ல இருக்கிறோம். அங்கு கடைகள் இருக்கா என்று தெரியவில்லை. இப்படி திடீரென பந்த் அறிவித்ததன் மூலம் ஐயப்பனை தரிசிக்க வரும் எங்களைப்போல் உள்ள ஐயப்ப பக்தர்கள் தான் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என்று கூறினார்கள்.

s

இந்தநிலையில் போராட்டக்காரர்கள் கண்னூர் உள்பட சில பகுதிகளில் ரோடுகளில் டயர்களை போட்டு எரித்து கடைகளை அடித்து நொறுக்கியும் வன்முறையில் ஈடுபடுகிறார்கள். இதனால் பல அய்யப்ப பக்தர்கள் சபரிமலைக்கு கூட போகாமல் மனம் நொந்து போய் பாதியிலேயே அப்பகுதிகளில் இருக்கக்கூடிய கோயில்களில் இருமுடியை இறக்கி நெய், தேங்காயை அபிஷேகம் செய்துவிட்டு திரும்பி ஊருக்கு வருகிறார்கள். இப்படி 48 நாள் அய்யப்ப பக்தர்கள் விரதமிருந்து ஐயப்பனை தரிசிக்க செல்லும் போது இப்படிப்பட்ட பல பிரச்சினைகள் மூலம் அங்கங்கே கலவரம் வெடித்து வருவதால் மனம் நொந்து போய் ஐயப்பனை தரிசிக்காமலேயே வீடு திரும்பி வருகிறார்கள் . இந்த நிலையில் தான் கேரளாவில் உள்ள வளரசேரி பகுதியை சேர்ந்த ஜெயராஜ் சபரி என்ற ஐயப்ப பக்தர் மனம் நொந்துபோய் தற்கொலையும் செய்து கொண்டார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

sabarimala
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe