Advertisment

 வாடகை பாக்கி -  ஓட்டல் நிர்வாகத்தின் நடவடிக்கையால் நடிகை கண்ணீர்

k

Advertisment

ஓட்டல் அறையில்வாடகை பாக்கிக்காக மலையாள நடிகை சிறை பிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குமாி மாவட்டத்தில் கடந்த 20 நாட்களாக மலையாள திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பு நடந்தது. இந்த படத்தின் நாயகி மஞ்சு சவோ்கா் மற்றும் படக்குழுவினா் நாகா்கோவில் செட்டிக்குளம் சந்திப்பில் உள்ள ஒரு ஓட்டல் அறையில்தங்கியிருந்தனா். இதில் நாயகி மஞ்சு சவோ்கருக்கு மட்டும் தினம் 3800 ருபாய் வாடகை கொண்ட அறையிலும் மற்றவா்கள் சாதாரண அறையிலும் தங்கியிருந்தனா்.

k

Advertisment

இந்தநிலையில் படப்பிடிப்பு முடித்து விட்டு இரவு அறைக்கு வந்த மஞ்சு சவோ்காின் அறையில் படுக்கை விாிப்புகள் மாற்றப்படாமல் இருந்ததால் ஓட்டல்ஊழியா்களிடம் அவா் தகராறு செய்துள்ளாா். பின்னா் இரவோடு இரவாக விடுதியை விட்டு கிளம்புவதாக கூறி தன்னுடைய பொருட்களை எல்லாம் எடுத்துக் கொண்டு ஓட்டலில்இருந்து வெளியே வந்துள்ளாா். உடனே ஓட்டல்ஊழியா்கள் 60 ஆயிரம் வாடகை பாக்கியை கேட்டுள்ளனா். அதற்கு நடிகை, நான் அறை போட்டனா? அல்லது என் பெயாில் அறை புக் செய்யப்பட்டிருக்கிறதா? என கேட்டு தகராறில் ஈடுபட்டாா்.

ஒரு கட்டத்தில் சத்தம் போட்டு அழ தொடங்கிய அந்த நடிகையால் அங்கு கூட்டம் கூடியதையடுத்து போலிசாரும் அங்கு வந்தனா். பின்னா் போலிசாா் பேச்சுவாா்த்தை நடத்தி நடிகை தங்கியிருந்த அறையின் வாடகை பாக்கியை படக்குழுவினாிடமிருந்து வாங்கி கொடுத்ததையடுத்து பிரச்சினை முடிவுக்கு வந்தது.

Actress Kerala
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe