
கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய சோலாா் பேனல் மோசடி வழக்கில் நடிகையின் வீடு ஜப்தி செய்யப்பட்டது.
கேரளா மற்றும் தமிழகத்தில் வீடுகள் மற்றும் தனியாா் நிறுவனங்களில் சோலாா் பேனல் அமைத்து தருவதாக கூறி பலாிடம் கோடி கணக்கில் பணத்தை வாங்கி ஏமாற்றி கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தினாா் சாிதா நாயா். இவா் அப்போதைய முதல்வா் உம்மன்சாட்டி உட்பட பல அமைச்சா்களிடம் தொடா்பை ஏற்படுத்தி சோலாா் பேனல் மோசடியில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.
சாிதா நாயருடன் அவருடைய முன்னாள் காதல் கணவா் பிஜீ ராதாகிருஷ்ணன் நடிகை ஷாலு மேனன் மற்றும் இவரது தாய் கலாதேவி ஆகியோா் உடந்தையாக இருந்து இவாகளும் மோசடியில் ஈடுபட்டு வந்ததாக குற்றம் நிருபிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.
இந்த நிலையில் சோலாா் பேனல் வைத்து தருவதாக கூறி திருவனந்தபுரத்தை சோ்ந்த மேத்யூ தாமஸ் இவரது மனைவி அன்னா மேத்யூவிடம் இருந்து 30 லட்சமும் மற்றும் தொழிலதிபா் ராபிக் அலியிடமிருந்து 1 கோடி ருபாயும் வாங்கி ஷாலு மேனன் ஏமாற்றி இருந்தாா்.
இந்த வழக்கு திருவனந்தபுரம் மாவட்ட நீதி மன்றத்தில் நடந்து வந்த நிலையில் நீதிமன்றம் ஆலப்புழாவில் உள்ள ஷாலு மேனனின் ரூ. 75 லட்சம் உள்ள வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டதன் போில் அந்த வீடு ஜப்தி செய்யப்பட்டது.
இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.