aravind kejiriwal

நடிகர் கமல்ஹாசன் ராமேஸ்வரம் மாவட்டத்தில் உள்ள அப்துல் கலாம் வீட்டில் இருந்து தனது அரசியல் பயணத்தை நாளை தொடங்க இருக்கிறார். அங்கிருந்து சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

Advertisment

அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு, திமுக தலைவர் கலைஞர், தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், உள்ளிட்ட அரசியல் மூத்த தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். இதேபோல் நடிகர் ரஜினியையும் சந்தித்து வாழ்த்து பெற்றிருந்தார்.

Advertisment

இந்நிலையில், மதுரையில் நாளை நடக்க இருக்கும் பொதுக் கூட்டத்தில் ஆம்ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.