ADVERTISEMENT

அரியலூர் - பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது 

06:21 PM Aug 30, 2020 | rajavel

ADVERTISEMENT

அரியலூர் மாவட்டம் கீழப்பழூர் கிராமத்தைச் சேர்ந்தவர் காமராஜ் என்பவரது மனைவி மலர்கொடி. வயது 47. இவரது மகன் கலைவாணன். வயது 28. இவருக்கு திருமணமாகி மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காமராஜ் இறந்துவிட்டார். இதையடுத்து மேலப்பழுவூர் கிராமத்தைச் சேர்ந்த மாட்டு வியாபாரி பழனிவேல் (55) என்பவரும் மலர்கொடியும் கணவன்-மனைவி போல தனியாக வாழ்ந்து வந்துள்ளனர்.

ADVERTISEMENT

கடந்த இரண்டு மாதங்களாக மலர்கொடி, திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் விரிவாக்கப் பணிகள் நடந்து வருகிறது. அந்தப் பணிகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சமையல் செய்து கொடுக்கும் பணியை செய்து வந்துள்ளார். இப்படி வேலை செய்யும் பணியாளர் ஒருவருடன் மலர்கொடி நெருங்கிப் பழகியதாகவும் இதனால் ஆத்திரமடைந்த பழனிவேல் மலர்கொடியை கண்டித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இப்படிப்பட்ட நிலையில் கடந்த 25ஆம் தேதி மலர்கொடி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இந்த கொடூர கொலை குறித்து தகவல் அறிந்த கீழப்பழூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மலர்க்கொடியோடு சேர்ந்து வாழ்ந்தவந்த அவரது கள்ளக்காதலர் மாட்டு வியாபாரி பழனிவேல், மலர்கொடி மகன் கலைவாணன் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் இப்படி பல்வேறு தரப்பினரிடமும் மலர்கொடி கொலை குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மலர்கொடி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் கீழப்பழூர் மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போலீசாரின் விசாரணையின் அடிப்படையில் கோவில் சீமை என்ற கிராமத்தைச் சேர்ந்த 33 வயது விஜயபாஸ்கர் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் கடந்த 25ஆம் தேதி தான் மதுபோதையில் இருந்தபோது, மலர்கொடி வீட்டில் தனியாக இருந்ததை பார்த்து விட்டு உள்ளே சென்று தனது ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தியதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். கட்டாயப்படுத்தி போது எதிர்த்துப் போராடினார். அவரை உயிரோடு விட்டால் நடந்த சம்பவத்தை உறவினர்களிடம் கூறி போலீசில் சிக்க வைத்து விடுவார். இதனால் ஆத்திரமடைந்து மறைத்து வைத்திருந்த கத்தியால் கொடூரமாக மலர்க்கொடியை கொலை செய்தேன் என்று விஜயபாஸ்கர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து கொலைக் குற்றவாளி விஜயபாஸ்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர் கீழப்பழுவூர் போலீஸார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT