Museum - Tamil Nadu Chief Minister will inaugurate today

Advertisment

சிவகங்கை மாவட்டம் கீழடியில் கட்டப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைக்க இருக்கிறார்.

முதல் கட்டமாக கடந்த மாதம் 1ம் தேதி ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை வேலூர் ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்ட அரசு திட்டங்களை தமிழக முதல்வர் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். இரண்டாம் கட்டமாக கடந்த 15ஆம் தேதி சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ஆய்வு செய்தார். இந்தநிலையில் மூன்றாம் கட்டமாக இன்று மற்றும் நாளை மதுரையை மையமாக வைத்து தமிழக முதல்வர் அரசு திட்டங்களை ஆய்வு செய்ய இருக்கிறார். அதற்காக மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி ஆகிய ஐந்து மாவட்டங்களில் நடந்து முடிந்த அரசு பணிகளை ஆய்வு செய்ய இருக்கிறார். இதற்காக மதுரை வரும் தமிழக முதல்வர் இன்று மாலை சிவகங்கை சென்று சுமார் 18 கோடி ரூபாய் செலவில் வண்ண வண்ண ஒளி அமைப்புகளுடன் உருவாக்கப்பட்டுள்ள கீழடி அருங்காட்சியகத்தை மாலை 6 மணிக்கு தமிழக முதல்வர் திறந்துவைக்க இருக்கிறார்.