ADVERTISEMENT

கீழடி அகழாய்வு; மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

06:35 PM Feb 26, 2024 | prabukumar@nak…

கீழடியில் மத்திய அரசு மேற்கொண்ட அகழாய்வு அறிக்கையை வெளியிடச் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2013 முதல் 2016 வரை மத்திய அரசு சார்பில் முதல் 2 கட்ட அகழாய்வு நடத்தப்பட்டது. இந்த அகழாய்வில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழமையான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இது குறித்து சமர்ப்பிக்கப்பட்ட 982 பக்கங்கள் உள்ள தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையை வெளியிட வேண்டும் என மதுரையைச் சேர்ந்த பிரபாகர் பாண்டியன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இதனையடுத்து இந்த மனு மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது.

ADVERTISEMENT

இந்நிலையில், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபூர்வாலா தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “கீழடியில் மத்திய அரசு மேற்கொண்ட அகழாய்வு குறித்த அறிக்கைகள் தயாரிக்கும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. 9 மாதங்களில் அறிக்கை வெளியிடப்படும்” எனத் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவில், “கீழடியில் நடத்தப்பட்ட முதல் 2 கட்ட அகழாய்வு குறித்த அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையை 9 மாதங்களில் பொது வெளியில் வெளியிட வேண்டும்” என மத்திய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT