Keeramangalam Karambakkadu village Loadman Kamaraj incident

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கரம்பக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் லோடுமேன் காமராஜ். இவர் கடந்த சில மாதங்களாக ஒரு சிலருடன் சேர்ந்து வெளியூரில் தேங்காய் ஓடு கறி தயாரிக்கும் பணிக்கு வேலைக்குச் சென்றவர் இன்று தான் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இத்தகைய சூழலில் தான் இன்று மாலை எல்.என். புரம் ஊராட்சி புளிச்சங்காடு கைகாட்டியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிக்கச் சென்றுள்ளார்.

Advertisment

அப்போது அங்கு சிலருடன் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அங்கிருந்த யாரோ ஒருவர் பீர் பாட்டிலை எடுத்து லோடுமேன் காமராஜ் தலையில் அடித்துள்ளனர். இதில் தலையில் பலத்த காயமடைந்து ரத்தம் வெளியேறியதைப் பார்த்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து கீரமங்கலம் 108 ஆம்புலன்ஸ் விரைந்து சென்று தலையில் காயத்துடன் ரத்தத்துடன் கிடந்த லோடுமேன் காமராஜை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

Advertisment

அதனைத் தொடர்ந்து காயத்திற்குள் இருந்த பீர் பாட்டிலின் உடைந்த கண்ணாடி துண்டுகளை அகற்றி பேராவூரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். மேலும் கண்ணாடி ஓடுகள் தலையில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. கூலித் தொழிலாளிக்கு டாஸ்மாக் கடை அருகே நடந்த இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதே சமயம் சம்பவம் குறித்து வடகாடு போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.