vaiko

கீழடி அகழ்வாராய்ச்சி பணிகளை மதிமுக பொது செயலாளர் வைகோ நேரில் பார்வையிட்டு அகழ்வாராய்ச்சி குறித்த விபரங்களை கேட்டறிந்தார். வைகோவுடன் மதுரை எம்.பி/ சு.வெங்கடேசன், எம்.எல்.ஏ.பி.டி.ஆர் பழனிவேல் தியாகராசன் ஆகியோர் இருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, "கீழடியில் எடுக்கப்பட்ட 16 ஆயிரம் பொருட்களில் வழியே எழுத்தறிவு பெற்ற மக்கள் வாழ்ந்து உள்ளதை அறிய முடிகிறது. கீழடி அகழ்வாராய்ச்சிக்காக அரும்பணியாற்றியவர் அமர்நாத் ராமகிருஷ்ணன். நெசவு தொழில், உருக்கு தொழில் போன்ற தொழில்கள் உள்ளது.

Advertisment

Advertisment

கீழடியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். கீழடி சுற்றியுள்ள 110 ஏக்கரிலும் அகழ்வாராய்ச்சி நடத்த வேண்டும். கீழடி பகுதியில் சர்வதேச தரத்தில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். சிவகலை, தாமிரபரணி, காவேரி பூம்பட்டினம், ஆகிய இடங்களில் அகழ்வாராய்ச்சி நடத்த வேண்டும். தமிழக தொல்லியல் துறைக்கும், ஆய்வாளர்களுக்கும் பாராட்டுக்கள். உலகின் முதல் நாகரிகம் தமிழர் நாகரிகம் மட்டுமே, இதை உலகம் முழுக்க விரைவில் ஒத்துக் கொள்வார்கள்" என கூறினார்.