Advertisment

தரம் இல்லாத ஒப்பந்ததாரர்களை வைத்து பணி செய்வதாக கே.சி.கருப்பணன் புகார்

KC Karuppanan complains about working with substandard contractors

ஈரோடு மாவட்டம் பவானி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் கட்டடம் கட்டுதல் ,குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிகள் அமைத்தல், சாலைகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஒப்பந்ததாரர்கள் மூலமாக நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்நிலையில் ஒப்பந்தம் எடுத்த திமுகவை சேர்ந்தவர்கள் தரமான முறையில் பணிகளை மேற்கொள்ளவில்லை எனவும், மக்கள் நலப் பணிகளை மிகத்தாமதப்படுத்தி வருவதாகவும் கூறி முன்னாள் அமைச்சரும் பவானி சட்டமன்ற உறுப்பினருமான கே.சி.கருப்பணன் தலைமையில் அதிமுகவை சேர்ந்த ஊராட்சி மன்றத்தலைவர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு அளித்தனர். மேலும், இந்த புகாரின் மீது மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட இடங்களில் உடனடியாக ஆய்வு நடத்தி தரமான பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என கே.சி.கருப்பணன் கேட்டுக்கொண்டார்.

Advertisment

Erode
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe