Advertisment

பொன்.ராதாகிருஷ்ணன் என்ன பா.ஜ.க தலைவரா? - கே.பாலகிருஷ்ணன் கேள்வி!

k.balakrishnan press meet

Advertisment

தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியேஅ.தி.மு.கவின் முதல்வர் வேட்பாளர் என அறிவிக்கப்பட்ட அதே நாளில், செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அ.தி.மு.கவுடனானகூட்டணி நாடாளுமன்றத் தேர்தலுக்காக வைக்கப்பட்ட கூட்டணி. ஆனால் வருகின்ற சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து தேர்தல் நெருங்கும் போதுதான் தெரியும். அ.தி.மு.கவுடனோ,தி.மு.கவுடனோ கூட்டணி அமைய வாய்ப்புண்டு என்ற ஒரு கருத்தை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தி.மு.கவுடன் கூட்டணி குறித்து பேச பொன்.ராதாகிருஷ்ணன் என்ன அக்கட்சியின் தலைவரா? எனக் கேள்வியெழுப்பினார்.மேலும், சட்டமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தங்கள் சின்னத்திலேயே போட்டியிடும் என்றார்.

Advertisment

K Balakrishnan Marxist Party Pon Radhakrishnan
இதையும் படியுங்கள்
Subscribe