விமானி அபிநந்தனை பத்திரமாக மீட்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனை பத்திரமாக மீட்பதற்கு மத்திய அரசும், இந்திய ராணுவமும் விரைந்து ஆக்கப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

Advertisment

jammu

மேலும் விமானி அபிநந்தன் வர்த்தமானின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எமது கவலையை பகிர்ந்து கொள்வதோடு, அவரை மீட்பதற்கு இந்திய அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதுணையாக நிற்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.