Skip to main content

'மக்களை ஏமாற்றும் மாயாஜாலம்’- பட்ஜெட் குறித்து கே.பாலகிருஷ்ணன்

Published on 02/02/2019 | Edited on 02/02/2019

 

b


மத்திய இடைக்கால நிதிநிலை அறிக்கை குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்,
கருத்து :   நான்கரை ஆண்டு காலம் நாசகர பொருளாதாரக் கொள்கைகளால் மக்களது வாழ்வை சீரழித்த நரேந்திர மோடி அரசு  நாட்டு மக்களை ஏமாற்றிட மேற்கொள்ளப்பட்ட  காகிதப்பூக்களே நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அறிவிப்புகளாகும். கடந்த  நாடாளுமன்றத் தேர்தலின் போது அளிக்கப்பட்ட ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை, விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்குவது, விளை பொருளுக்கு நியாய விலை வழங்குவது, விவசாயக் கடன் தள்ளுபடி, கருப்பு பணத்தை பறிமுதல் செய்து அனைவரது வங்கி கணக்கில் ரூ. 15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் உள்ளிட்ட பல வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. பண மதிப்பு நீக்க நடவடிக்கை, ஜி.எஸ்.டி. வரி விதிப்பு போன்றவைகளால் விவசாயம், தொழில், வணிகம் அனைத்தும் நொறுக்கப்பட்டு விட்டது. இவைகளால் வேதனையடைந்த மக்களை கவருவதற்கு சில கவர்ச்சியான திட்டங்களை அறிவித்துள்ளது.

 

பொறுப்பு நிதியமைச்சர் பியுஸ் கோயல் அவர்கள் அறிவித்துள்ள பல திட்டங்களுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்யாததால் இவைகள் வெறும் அறிவிப்புகளாகவே நீடிக்கும்.

விவசாயத்துறையில் விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்காக உயர்ந்து விட்டது என்ற கூற்று எவ்வளவு போலியானது என்பது, தொடரும் விவசாயிகள் தற்கொலை மூலமாக புரிந்து கொள்ள முடியும். ஏற்கனவே அறிவித்த பல திட்டங்கள் கிடப்பில் போடப்பட்ட நிலையில், ஆண்டுக்கு 6000 ரூபாய் என்ற அறிவிப்பும் கண்துடைப்பாகவே அமையும். இதற்கான நிதி ஒதுக்கீடும் செய்யப்படவில்லை.

சுகாதாரத்துறையில் ஆயுஷ்மான் பாரத் என்ற காப்பீட்டுத் திட்டத்திற்கு ரூ. 3000 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. இது 50 கோடி மக்களுக்கான திட்டமாகும். எனவே, தலைக்கு ரூ. 60/-ஐ ஒதுக்கி விட்டு அவர்களுக்கு லட்சக்கணக்கான ரூபாய் மருத்துவக் காப்பீட்டு வசதிகள் கிடைக்கும் என்பது நடைமுறையில் அமல்படுத்த முடியாத வெற்று அறிவிப்பாகவே அது அமையும்.

அகில இந்திய மருத்துவக்கழகத்தின் சிறப்பு மருத்துவமனைகள் 22  இருப்பதாக கூறப்பட்டாலும், அவற்றில் புதிதாக துவங்கப்பட்ட 14 மருத்துவமனைகளுக்கு முழுமையான நிதி ஒதுக்கீடு இல்லை. தேவையான மருத்துவ அடிப்படை கட்டமைப்பு செய்யப்படுவதற்கு பல காலம் பிடிக்கும் என்ற விஷயம் மறைக்கப்படுகிறது.

வருமான வரி வரம்பை உயர்த்த வேண்டுமென்பது மத்திய தர மக்களின் நீண்ட கால கோரிக்கையாகும். இவ்வளவு காலம் இதை நிறைவேற்றாமல் மோடி அரசு நிகர வருமானம் ரூ. 5 லட்சம் வரை வருமான வரம்பு உயர்த்தப்பட்டுள்ளதாக செய்துள்ள அறிவிப்பும் எதிர்பார்த்திருந்த பெரும்பகுதியினருக்கு பலனளிக்காத முறையில் செய்யப்பட்டுள்ளது.

பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் மூலம் கருப்பு பணம் பெருமளவு கைப்பற்றப்படவில்லை என ரிசர்வ் வங்கி அறிக்கை குறிப்பிட்டுள்ள நிலையில் தற்போது 1.30 லட்சம் கோடி ரூபாய் மீட்கப்பட்டதாக அறிவித்திருப்பது நம்பத்தகுந்ததாக இல்லை.

தேசிய மாதிரி ஆய்வுக்குழு 2017-18ல் பண மதிப்பு நீக்க நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி. வரி உயர்வால் வேலையின்மை கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது என தனது அறிக்கையில் கூறியது. இந்த அறிக்கையை மூடி மறைப்பதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டார்கள். இத்தகைய மோசடி செய்த மத்திய அரசு, பட்ஜெட்டில் வேலைவாய்ப்பை உருவாக்கப் போவதாக மக்களை ஏமாற்ற முனைகிறது. 

தொலைநோக்கு திட்டம் 2030 என்ற முறையில் நிதிநிலையில் செய்யப்பட்டுள்ள அறிவிப்புகள் இதுவரை அவர்கள் சொல்லி வந்த பல கனவுத் திட்டங்களின் தூசு தட்டி எடுத்த தொகுப்பாகவே அமைந்துள்ளது. இவற்றை நிறைவேற்றுவதற்கான எந்தவிதமான கால அவகாசமோ, நிதி ஆதாரமோ, அங்கீகாரமோ இல்லை.

மொத்தத்தில மத்திய அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் உள்ள அறிவிப்புகள் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கும் தீர்வாகாது, வரவிருக்கிற தேர்தலில் பாஜகவுக்கும் பலனளிக்காது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சுட்டிக்காட்ட விரும்புகிறது.’’

சார்ந்த செய்திகள்

Next Story

“திண்டுக்கல் தொகுதி இந்திய அளவில் முதலிடத்தில் வரவேண்டும்” - அமைச்சர் சக்கரபாணி

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
"Dindigul Constituency should come first in India" Minister Chakrapani

திண்டுக்கல் தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளர் ஆர். சச்சிதானந்தத்தை ஆதரித்து ஒட்டன்சத்திரம் தொகுதிக்குப்பட்ட அரங்கநாதபுரம், லெக்கையன்கோட்டை, சாலைபுதூர் சத்தியநாதபுரம், கே. அத்திகோம்பை, காளாஞ்சிபட்டி வெரியபூர், பழையபட்டி, திப்பம்பட்டி, கேதையூறும்பு, புலியூர்நத்தம், பி.என். கல்லுப்பட்டி, முத்துநாயக்கன்பட்டி, குளிப்பட்டி, ஜவ்வாது பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி வாக்கு சேகரித்தார்.

அப்போது அமைச்சர் சக்கரபாணி பேசும்போது, “இந்தியா கூட்டணி வெற்றி பெற்றவுடன் சிலிண்டர் ரூ.5 00க்கும், பெட்ரோல் ரூ. 75க்கும், டீசல் ரூ.65க்கும் வழங்கப்படும். 100 நாள் வேலைத்திட்ட சம்பளம்  ரூ. 400 ஆக உயர்த்தப்படும், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் தொகுதி எம்.பி. வேலுச்சாமி, 5 லட்சத்து 50 ஆயிரம் ஓட்டுகள் கூடுதலாகப் பெற்று தமிழகத்தில் முதல் இடத்தையும், இந்திய அளவில் மூன்றாவது இடத்தையும் பிடித்தார். இந்த தேர்தலில் திராவிட மாடல் அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி அதிக வாக்குகளை பெற்று இந்தியாவிலேயே முதலிடத்தை பெற்ற தொகுதியாக திண்டுக்கல் தொகுதி இடம் பெற வேண்டும்” என்று பேசினார். 

Next Story

“கூட்டணி கட்சியின் வேட்பாளர்களை மதிக்கக் கூடிய ஒரே இயக்கம் திமுக தான்” - பாலகிருஷ்ணன்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
 DMK is the only movement that can respect the candidates of the coalition party says Balakrishnan

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சி சார்பாக போட்டியிடும் சி.பி.எம் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக நிர்வாகிகளுக்கு அறிமுகம் செய்யும் கூட்டம், மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் மாளிகையில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட செயலாளரும், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சருமான சக்கரபாணி, சி.பி.எம்.கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கே.பாலபாரதி, கனகராஜ், பாண்டி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் வரவேற்று பேசினார்.

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பாக போட்டியிடும் சிபிஎம். கட்சி வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு அறிமுகம் செய்துவிட்டு அவரை வாழ்த்தி பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, “கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது வரலாறு காணாத வெற்றியை பெற்றோம். அதுபோல இம்முறையும் மாபெரும் வெற்றி பெறவேண்டும். கூட்டணி தர்மத்தை மதிக்க கூடிய கலைஞர் வழியில் வந்த கழகத்தலைவர் மு.க.ஸ்டாலின் வழியில், திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடும் சிபிஎம் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தத்தை மாபெரும் வெற்றிபெற செய்வதன் மூலம் நாம் நம் கழகத்தலைவரின் பெருமைக்கு எடுத்துக்காட்டாக தேர்தல் பணியாற்ற வேண்டும். நாட்கள் குறைவாக இருக்கின்றன. கூட்டணி கட்சியின் சின்னத்தை ஒவ்வொரு இல்லம்தோறும் சென்றடையும் வண்ணம் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் அயராது உழைக்க வேண்டும். இங்கு போட்டியிடும் வேட்பாளரின் வெற்றி இந்திய அளவில் பேசும்படி செய்யும் வண்ணம் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்யவேண்டும்” என கூறினார்.

அடுத்து பேசிய அமைச்சர் சக்கரபாணி, “திண்டுக்கல்லில் சிபிஎம் கட்சி சார்பாக சச்சிதானந்தம் போட்டியிடவில்லை. தலைவரும் முதல்வருமான ஸ்டாலின்தான் போட்டியிடுகிறார். அதுபோல் அண்ணன் அமைச்சர் ஐ.பெரியசாமி தான் போட்டியிடுகிறார் என நினைத்து நீங்கள் ஒவ்வொருவரும் தேர்தல் பணியாற்ற வேண்டும். நாட்கள் குறைவாகத்தான் இருக்கின்றன. சின்னம் வரைவதில் முக்கியமில்லை. அந்த சின்னத்தை மக்கள் மனதில் நிறுத்துவதில்தான் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். எப்படி ஸ்டாலின குரல் திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து இல்லங்களிலும் ஒலித்ததோ, அதுபோல சிபிஎம் கட்சியின் சின்னமும் அனைத்து இல்லங்களிலும் தெரியும் வண்ணம் தேர்தல் பணியாற்ற வேண்டும். மாபெரும் வெற்றியை நாம் நமது முதல்வருக்கு தெரிவிக்கும் வண்ணம் திமுக நிர்வாகிகள் இன்றே களப்பணியை தொடங்க வேண்டும்” என்று கூறினார்.

 DMK is the only movement that can respect the candidates of the coalition party says Balakrishnan

இறுதியாக சிபிஎம் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேசும் போது, “கூட்டணி கட்சியின் வேட்பாளர்களை மதிக்கக்கூடிய ஒரே இயக்கம் திமுக. அதற்கு காரணம் எங்கள் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் சச்சிதானந்தம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு கேட்க தொடங்கினால் காலநேரம் செலவாகும் என்பதை கருத்தில் கொண்டு தேர்தலில் வெற்றியை இலக்காக செயல்பட வைக்க வேண்டும் என்ற நோக்கில் அமைச்சர் அண்ணன் ஐ.பெரியசாமி அவர்களும், உணவு வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி அவர்களும் குறுகிய காலத்தில் இந்த வேட்பாளர் அறிமுக கூட்டத்தின் மூலம், திமுக நிர்வாகிகளுக்கு அறிமுகம் செய்துவைத்திருப்பது அவர்களின் தேர்தல் பணியின் சுறுசுறுப்பை எடுத்துக்காட்டுகிறது. திண்டுக்கல்லில் சிபிஎம் வேட்பாளர் பெறும் வெற்றி இந்திய கூட்டணியை ஆட்சி பீடத்தில் அமர வைக்கும் வெற்றியாக இருக்கும்.

தமிழக ஆளுநர் அரசியல் சட்டத்திற்கு விரோதமாக செயல்படுகிறார். உச்சநீதிமன்றமே பொன்முடி தண்டனையை நிறுத்தி வைத்தபோது, ஆளுநர் ஏன் பதவி பிரமாணம் செய்து வைக்காமல் இருக்கிறார் என்றால், அதற்கு காரணம் மத்தியில் ஆளும் மோடி அரசின் ஜனநாயக விரோதப் போக்கே. இங்கு போட்டியிடும் வேட்பாளரின் வெற்றி தமிழக முதல்வருடைய வெற்றி. அமைச்சர் ஐ.பெரியசாமியின் வெற்றி;  அமைச்சர் சக்கரபாணியின் வெற்றி. பம்ரபமாய் சுழன்று தேர்தல் பணியாற்றும் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் ஐ.பி.செந்தில்குமாரின் வெற்றி என்று திமுக மற்றும் சிபிஎம். கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் நினைத்து வெற்றிக்காகப் பாடுபட வேண்டும்” என்று கூறினார்.