ஒரு போராளித் தூதரை அடையாளம் கண்டு, அவருக்கு அமைதிக்கான தூதுவர் விருதை வழங்கி சிறப்பித்திருக்கும் லண்டனைத் தலைமையகமாகக் கொண்ட ’யுனிவர்சல் பீஸ் ஃபெடரேசன் ’ அமைப்புக்கு அன்பான பாராட்டு! கை குலுக்கல்!.
விருதைப் பெற்றிருக்கும் சகோதரர் நக்கீரன் கோபால் அவர்களே, இந்த விருதுக்கு மிகவும் பொருத்தமானவர் நீங்கள். தமிழக அரசியல் மற்றும் சமூக வரலாற்றில் உங்களுக்கென்று தனித்த இடம் உண்டு. சர்வதேச ’அமைதித் தூதர் விருதையும்’ அது தொடர்பான சிறப்பையும் நீங்கள் பெறும் இந்த நேரத்தில், தமிழகத்தின் சார்பிலான எங்கள் கவிஞர்களின் வாழ்த்துக்களையும் பேரன்பையும் இணைத்துக் கொள்ளுங்கள்.