Skip to main content

உங்களுக்கென்று தனித்த இடம் உண்டு!-சர்வதேச விருது பெற்ற நக்கீரன் ஆசிரியருக்கு கவிவேந்தர் மு.மேத்தா வாழ்த்து!

Published on 25/03/2022 | Edited on 25/03/2022

 

Kavivendar M. Mehta congratulates the internationally acclaimed Nakkeeran teacher!

 

ஒரு போராளித் தூதரை அடையாளம் கண்டு, அவருக்கு அமைதிக்கான தூதுவர் விருதை வழங்கி சிறப்பித்திருக்கும் லண்டனைத் தலைமையகமாகக் கொண்ட   ’யுனிவர்சல் பீஸ் ஃபெடரேசன் ’ அமைப்புக்கு அன்பான பாராட்டு! கை குலுக்கல்!.

 

விருதைப் பெற்றிருக்கும் சகோதரர் நக்கீரன் கோபால் அவர்களே,  இந்த விருதுக்கு மிகவும் பொருத்தமானவர் நீங்கள். தமிழக அரசியல்  மற்றும் சமூக வரலாற்றில் உங்களுக்கென்று தனித்த இடம் உண்டு. சர்வதேச ’அமைதித் தூதர் விருதையும்’ அது தொடர்பான சிறப்பையும் நீங்கள் பெறும் இந்த நேரத்தில், தமிழகத்தின் சார்பிலான எங்கள் கவிஞர்களின் வாழ்த்துக்களையும்  பேரன்பையும் இணைத்துக் கொள்ளுங்கள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழ்நாடு அரசுத் திரைப்பட விருதுகள் அறிவிப்பு; முழு விபரம் வெளியீடு!

Published on 04/03/2024 | Edited on 05/03/2024
Full details release forTN Govt Film Awards Announcement 

தமிழ்நாடு அரசின் சார்பில் திரைப்பட விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா நாளை மறுநாள் (06.03.2024) புதன்கிழமை மாலை 06.00 மணியளவில் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் முத்தமிழ்ப் பேரவை டி.என். ராஜரத்தினம் கலையரங்கில் நடைபெற உள்ளது. இதில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் விழாவிற்குத் தலைமையேற்று விருதாளர்களுக்குத் தங்கப்பதக்கம், சிறந்த திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுக்கு காசோலை, நினைவுப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி விழா உரையாற்றுகிறார். மேலும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர். 

2015 ஆம் ஆண்டிற்குத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த படங்கள் : 

சிறந்த படத்திற்கான முதல் பரிசு : தனி ஒருவன், இரண்டாம் பரிசு : பசங்க 2, மூன்றாம் பரிசு : பிரபா, சிறந்த படத்திற்கான சிறப்புப் பரிசு : இறுதிச்சுற்று, பெண்களைப் பற்றி உயர்வாகச் சித்திரிக்கும் படம் (சிறப்புப் பரிசு) : 36 வயதினிலே. 

2015 ஆம் ஆண்டிற்குத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் : 

சிறந்த நடிகர்: ஆர். மாதவன் (இறுதிச்சுற்று), சிறந்த நடிகை : ஜோதிகா (36 வயதினிலே), சிறந்த நடிகர் சிறப்புப் பரிசு: கௌதம் கார்த்திக் (வை ராஜா வை), சிறந்த நடிகை சிறப்புப் பரிசு: ரித்திகா சிங் (இறுதிச்சுற்று), சிறந்த வில்லன் நடிகர்: அரவிந்த்சாமி (தனி ஒருவன்), சிறந்த நகைச்சுவை நடிகர்: சிங்கம்புலி (அஞ்சுக்கு ஒண்ணு), சிறந்த நகைச்சுவை நடிகை: தேவதர்ஷினி (திருட்டுக் கல்யாணம் / 36 வயதினிலே), சிறந்த குணச்சித்திர நடிகர்: தலைவாசல் விஜய் (அபூர்வ மகான்), சிறந்த குணச்சித்திர நடிகை: கவுதமி (பாபநாசம்), சிறந்த இயக்குநர்: சுதா கொங்கரா (இறுதிச்சுற்று), சிறந்த கதையாசிரியர்: மோகன் ராஜா (தனி ஒருவன்), சிறந்த உரையாடலாசிரியர்: இரா. சரவணன் (கத்துக்குட்டி), சிறந்த இசையமைப்பாளர்: ஜிப்ரான் (உத்தம வில்லன்/ பாபநாசம்), சிறந்தப் பாடலாசிரியர்: விவேக் (36 வயதினிலே), சிறந்த பின்னணிப் பாடகர்: கானா பாலா (வை ராஜா வை), சிறந்த பின்னணிப் பாடகி: கல்பனா ராகவேந்தர் (36 வயதினிலே), சிறந்த ஒளிப்பதிவாளர்: ராம்ஜி (தனி ஒருவன்), சிறந்த ஒலிப்பதிவாளர்: ஏ.எல்.துக்காராம், ஜெ.மஹேச்வரன்: (தாக்க தாக்க), சிறந்த திரைப்படத் தொகுப்பாளர் (எடிட்டர்) : கோபி கிருஷ்ணா (தனி ஒருவன்), சிறந்த கலை இயக்குநர் (ஆர்ட் டைரக்டர்) : பிரபாகரன் (பசங்க 2), சிறந்த சண்டைப் பயிற்சியாளர்: ரமேஷ் (உத்தம வில்லன்), சிறந்த நடன ஆசிரியர்: பிருந்தா (தனி ஒருவன்), சிறந்த ஒப்பனைக் கலைஞர்: சபரி கிரீஷன் (36 வயதினிலே மற்றும் இறுதிச்சுற்று), சிறந்த தையற் கலைஞர்: வாசுகி பாஸ்கர் (மாயா), சிறந்த குழந்தை நட்சத்திரம்: மாஸ்டர் நிஷேஸ், பேபி வைஷ்ணவி (பசங்க 2), சிறந்த பின்னணிக் குரல் (ஆண்) : கௌதம் குமார் (36 வயதினிலே), சிறந்த பின்னணிக் குரல் (பெண்) : ஆர். உமா மகேஸ்வரி (இறுதிச்சுற்று). 

Full details release forTN Govt Film Awards Announcement
மாதிரிப்படம்

தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் 2014-2015 : 

சிறந்த இயக்குநர்: கே. மோகன் குமார், சிறந்த ஒளிப்பதிவாளர்: விக்னேஷ் ராஜகோபாலன் (கண்ணா மூச்சாலே), சிறந்த ஒலிப்பதிவாளர்: வி. சதிஷ் (கண்ணா மூச்சாலே), சிறந்த படத்தொகுப்பாளர்: ஏ.முரளி (பறை), சிறந்த படம் பதனிடுவர்: வி. சந்தோஷ்குமார் (கிளிக்).

Full details release forTN Govt Film Awards Announcement

மேலும் தமிழ்நாடு அரசுத் திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் அமைச்சர் மு.பெ. சாமிநாதன் சிறந்த திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள், சிறந்த நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள், தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன மாணவர்கள் தயாரித்த குறும்படங்களின் தொழில்நுட்பக் கலைஞர்கள் என மொத்தம் 39 விருதாளர்களுக்குக் காசோலையும். விருதாளர்களின் பெயர் பொறித்த தங்கப்பதக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ்களும் வழங்குகிறார். இவ்விழாவில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், உயர் அலுவலர்கள், திரையுலகத்தைச் சார்ந்த பிரமுகர்கள், நடிகர், நடிகையர் தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். 

Next Story

“எல்லாமே வித்தியாசமாக இருக்கு” - நக்கீரன் ஆசிரியர் பாராட்டு

Published on 02/03/2024 | Edited on 02/03/2024

 

சென்னை அண்ணா நகரில் உருவாகி இருக்கும் இச்சாஸ் புதிய உணவகத்தை நடிகர், இயக்குநர் பார்த்திபன் திறந்து வைத்தார். இந்த விழாவில் நக்கீரன் ஆசிரியர், ஓவியர் ஏ.பி.ஶ்ரீதர், நடிகை லலிதா குமாரி, நடிகர் விக்ரமின் தாயார் ராஜேஷ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இச்சாஸ் உணவகத்தில் நுழைந்தவுடன் உலகப் புகழ்பெற்ற ஓவிய கலைஞர் ஏ.பி. ஸ்ரீதர் கைவண்ணத்தில் உருவான ஓவியங்களைப் பார்த்து ரசித்தனர். இந்த ஓவியங்கள் அனைத்தும் ஒரே புள்ளியில் துவங்கி முழுமை பெற்றது குறிப்பிடத்தக்கது. பார்த்திபன் வர்ணம் தீட்டி குத்துவிளக்கை ஏற்றினார். உணவகத் துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் கொண்டவரும், இச்சாஸ் நிறுவனருமான கணேஷ் ராம், பாரம்பரியம் மிக்க இந்திய  உணவு வகைகளைக் கொண்டு வயிற்றுப் பசியை மட்டுமின்றி மன நிறைவை தரும் அனுபவத்தை வழங்க விரும்புவதாக தெரிவித்தார். 

இச்சாஸ் திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய நக்கீரன் ஆசிரியர், “இந்த கடை ஓபனிங்கே சிறப்பா இருக்கு. இந்த கடை மேலும் சிறக்க வாழ்த்துகள். நிறுவனர் கணேஷ் மேலும் பல கிளைகளை இதே போன்று திறக்க வாழ்த்துகிறேன். துவக்கத்திலேயே விளக்கில் பெயிண்ட் அடித்தது, கடையின் வடிவமைப்பு என எல்லாமே வித்தியாசமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இங்கு வைக்கப்பட்டு இருக்கும் ஓவியங்கள் அனைத்தும் ஒரே புள்ளியில் துவங்கி முடித்திருக்கிறார் ஓவியர் ஸ்ரீதர். ஒரு விடுதிக்கு வந்தோம், சாப்பிட்டோம் என்றில்லாமல், சிறப்பான அனுபவத்தை இச்சாஸ் கொடுக்கிறது.

பெரிய கோப்பையில் காஃபி கொடுத்து, அதை குடிக்க உலகின் சிறிய கோப்பையை வழங்கியது மிகவும் வித்தியாசமாக இருந்தது. இது போன்று பல வித்தியாசங்களை ஒருங்கே வைத்திருக்கும் இச்சாஸ் அதிக கிளைகளுடன் நீண்ட காலத்திற்கும், இதை சார்ந்து இருப்பவர்களுக்கும் நன்மையை கொடுக்க வேண்டும் என நக்கீரனின் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.