சரவணன் போல் பிக் பாஸ்ஸில் இருந்து வெளியேற்றப்பட்ட கவின்? வைரலாகும் புகைப்படம்!

தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி இரண்டு சீசன்களை கடந்து தற்போது மூன்றாவது சீசன் நடைபெற்று கொண்டிருக்கிறது. இரண்டு சீசன்களை போலவே மூன்றாவது சீசனும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பிக் பாஸ் சீசன் 3ல் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, மோகன் வைத்யா, வனிதா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்ஷி, அபிராமி, மதுமிதா மற்றும் கஸ்தூரி இதுவரை போட்டியிலிருந்து வெளியேறியுள்ளனர். இந்த நிலையில் கடந்த வாரம் சேரன் பிக் பாஸ் வீட்டிலிருந்து சீக்ரெட் ரூமில் வைத்து இருந்தனர். பின்பு மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார்.

kavin

kavin

அதனையடுத்து போட்டியாளர்களின் குடும்ப உறுப்பினர்களை பிக்பாஸ் வீட்டிற்குள் விருந்தினர்களாக அழைத்து வந்து போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகின்றனர். இன்று பிக் பாஸ் ப்ரோமோ வீடியோவில் வனிதாவின் மகளும் இயக்குனர் சேரனின்மகளும்பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர். அதே போல் கவினின் தாயார் மற்றும் குடும்பத்தினரின் தனிப்பட்ட பிரச்னைகள் கவினுக்குத்தெரியாமல் இருந்து வந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த போட்டியாளர்களின் குடும்பத்தினரில் ஒருவர் இந்த தகவலை கவினிடம் கூறியதாக சொல்லப்படுகிறது. பின்பு சரவணனை கண்ணை கட்டி அனுப்பியது போல் கவினையும் அனுப்பியதுபோன்ற ஒரு புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. மேலும் கவின், லாஸ்லியா காதல் விவகாரமும் பார்வையாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம்இருந்து வெளிவரவில்லை.

bigboss contest kamalhaasan kavin tv show
இதையும் படியுங்கள்
Subscribe