Advertisment

பிக் பாஸ் லாஸ்லியாவிற்கு திருமணம் ஆகிவிட்டதா? கவின் கேள்வியால் அதிர்ச்சி!

தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி இரண்டு சீசன்களை கடந்து தற்போது மூன்றாவது சீசன் நடைபெற்று கொண்டிருக்கிறது. இரண்டு சீசன்களை போலவே மூன்றாவது சீசனும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பிக் பாஸ் சீசன் 3ல் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, மோகன் வைத்யா, வனிதா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்ஷி, அபிராமி, மதுமிதா மற்றும் கஸ்தூரி இதுவரை போட்டியிலிருந்து வெளியேறியுள்ளனர். இதில் வனிதா மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார்.

Advertisment

big boss

கடந்த சீசன்களை விட இந்த சீசனில் பங்கு பெற்ற போட்டியாளர்கள் மீது நிறைய சர்ச்சைகள் தினமும் வந்த வண்ணம் உள்ளது. இதனால் பார்வையாளர்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர். இந்த நிலையில் நேற்று கவனிடம் லாஸ்லியா பேசும் போது, இப்போது எந்த முடிவும் எடுக்காதே, வெளியே போன பிறகு நாம் ஒன்றாக பேசி முடிவெடுக்கலாம் என்று கூறியுள்ளார். அதற்கு கவின் என்ன பேச வேண்டும் நடந்து முடிந்ததை பற்றியா இல்ல நடக்க போறது பற்றியா என்று கேட்டார். அதற்கு லாஸ்லியா எல்லாமே பேச வேண்டும் என்று கூறினார். அதற்கு கவின் என்ன பாஸ்ட், உனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சா, குழந்தை பொறந்துடுச்சா.. அப்படியே இருந்தாலும் என்ன..” என கேட்டுள்ளார். அதை கேட்டு அதிர்ச்சியான லாஸ்லியா என்ன பேசுறீங்க என்று அதிர்ச்சியாக கேட்டார். ஏற்கனவே லாஸ்லியாவிற்கு திருமணம் ஆகிவிட்டது என்று சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவியது. இந்த நிலையில் கவின் இப்படி கேட்டது பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Advertisment
contest tv show kavin kamalhaasan Bigboss3
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe