tamil cinema film director kv anand paased away kavignar vairamuthu tweet

Advertisment

பிரபல திரைப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் (வயது 54), இன்று (30/04/2021) அதிகாலை 03.00 மணியளவில் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு மோகன்லால், குஷ்பூ, ராதிகா உள்ளிட்ட திரையுலகினர் தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கங்கள் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் கே.வி.ஆனந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள கவிஞர் வைரமுத்து, "வருந்துகிறேன் நண்பா! திரையில் ஒளிகொண்டு சிலை செதுக்கினாய்! ‘வாஜி வாஜி’ பாடலை ராஜ கவிதையாய் வடித்தெடுத்தாய்! என் எத்தனையோ பாடல்களை ரத்தினமாய் மாற்றினாய்! இதோ உனக்கான இரங்கல்பாட்டை எங்ஙனம் படம் செய்வாய்? விதவையான கேமரா கேவிக்கேவி அழுகிறது கே.வி.ஆனந்த்! ஒளியாய் வாழ்வாய் இனி நீ." என்று பதிவிட்டுள்ளார்.