கவிவேந்தர் மு.மேத்தா அறக்கட்டளை தொடக்க விழா!

mm

கவிவேந்தர் மு.மேத்தா அறக்கட்டளை தொடக்க விழா இன்று (05.09.2019 வியாழன்) மாலை 4.30 மணி அளவில் சென்னை புதுக்கல்லூரியில் நடைபெறுகிறது.

புதுக்கல்லூரி தமிழ்த்துறை, சிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை இணைந்து நடத்தும் இந்த விழாவில், 'வராதவை வருகின்றன' என்ற தலைப்பில் கவிஞர் ஈரோடு தமிழன்பன் தலைமையில் கவியரங்கம் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து இசையமைப்பாளர் தாஜ்நூர் மு.மேத்தா பாடல்களின் இசைநிகழ்ச்சி நடைபெறுகிறது.

இஸ்ரோ முன்னாள் இயக்குனர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை அறக்கட்டளை தொடக்க உரையாற்றுகிறார். ஈரோடு மக்கள் சிந்தனை பேரவையின் தலைவர் ஸ்டாலின் குணசேகரன் சிறப்புரையாற்றுகிறார்.

Foundation Festival!
இதையும் படியுங்கள்
Subscribe