Skip to main content

'காவி அம்பேத்கர் வெறுத்த நிறம் அல்ல அவர் விரும்பி ஏற்ற நிறம்''-ஹெச்.ராஜா, அர்ஜூன்சம்பத் கூட்டாக பேட்டி 

Published on 26/12/2022 | Edited on 26/12/2022

 

'Kavi Ambedkar was not the color he hated but the color he loved' - H. Raja interview

 

அண்மையில் அம்பேத்கரின் 66ஆவது நினைவு நாளின்போது இந்து மக்கள் கட்சி சார்பில் வெளியிடப்பட்டிருந்த போஸ்டரில் அம்பேத்கருக்கு காவி உடை அணிவிக்கப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதுதொடர்பாக அக்கட்சி நிர்வாகி கைது செய்யப்பட்டிருந்தார். 

 

இந்நிலையில் இன்று சினிமா சண்டை பயிற்சியாளர் கனல்கண்ணன், பாஜக பிரமுகர் எச்.ராஜா, இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த அர்ஜுன் சம்பத் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்பொழுது செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா, ''அம்பேத்கரே காவி அணிந்துதான் இருந்தார். அந்தப் படமே எங்களிடம் இருக்கிறது. இப்ப கூட எங்களால் காட்ட முடியும். அதை போஸ்டரில் போட்டால் உடனே காவல்துறை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கைக்கூலியாக செயல்படுமா என்ன? இதில் என்ன தேசிய பாதுகாப்பு கெட்டுப் போய்விட்டது.  அம்பேத்கர் புத்த மதத்தை தழுவினார். புத்த பிக்குகள் என்ன உடை அணிகிறார்கள். இவர்கள் யார் அதை டிடர்மைன்ட் பண்ண. எனவே ஒரு பெரிய ரவுடிகள் கூட்டத்தில் தமிழக அரசு சிக்கி தவித்து வருகிறது. நாடக காதல், ரவுடி கும்பல்கள் கையில் இருக்கிறது இந்த அரசாங்கம். காவல்துறை அந்த ரவுடி கும்பலின் ஏவல் ஆட்களாக போய் கும்பகோணத்தில் குருமூர்த்தியை கைது செய்திருக்கிறார்கள். குருமூர்த்தியை கைது செய்தது காவல்துறைக்கே அவமானம்''என்றார்.

 

'Kavi Ambedkar was not the color he hated but the color he loved' - H. Raja interview

 

அதன்பிறகு பேசிய அர்ஜுன் சம்பத், ''காவிநிறம் என்பது அம்பேத்கர் வெறுத்த நிறம் அல்ல அவர் விரும்பி ஏற்றுக் கொண்ட நிறம். புத்த மதமும் இந்து சமயத்தினுடைய ஒரு கூறு தான். இந்துவாகப் பிறந்தேன் இந்துவாக சாகமாட்டேன் என்று சொன்னது ஆதிக்க ஜாதியினருக்கும், ஜாதி வெறி கொண்டவர்களுக்கும் பாடம் புகட்டுவதற்காக, சீர்திருத்துவதற்காக அப்படி ஒரு முடிவை எடுத்தார். ஆனால் அவர் சட்டம் செய்கிற பொழுது இந்துக்கள் மட்டுமே போட்டியிட கூடிய தொகுதியை உருவாக்கினார். தனித்தொகுதி முறையை உருவாக்கினார். தனி தொகுதியில் யார் போட்டியிட முடியும் முஸ்லிம், கிறிஸ்தவர்கள் போட்டியிட முடியாது. மேல் சாதிக்காரர் கூட போட்டியிட முடியாது. தனித்தொகுதியில் சலுகைகளைஅனுபவிப்பவர்கள் இந்துக்களாக மட்டும் தான் இருக்க முடியும். இந்த சட்டத்தினால் தான் திருமாவளவன் இன்று வரை இந்து என்று சான்றிதழ் வைத்திருக்கிறார்''என செல்போனில் இருந்த புகைப்படத்தை எடுத்துக்காட்டினார்.

 

அப்போது குறுக்கிட்ட ஹெச்.ராஜா, ''அம்பேத்கருக்கு காவி உடை போட்டவரை கைது செய்யலாம் என்றால் வள்ளலாருக்கு திருநீறு இல்லாமல் படம் போட்டவரை கைது செய்யலாமே'' என்று ஆவேசமடைந்தார்.

 

 

சார்ந்த செய்திகள்