நம்பிக்கை வாக்கெடுப்பு -கவர்னரிடம் திருநாவுக்கரசர் நேரில் வலியுறுத்தல்



தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் இன்று கிண்டி கவர்னர் மாளிகையில் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து தனது மகன் திருமண அழைப்பிதழ் கொடுத்தார். அப்போது தமிழக அரசியல் நிலவரம் குறித்து கவர்னருடன் விவாதித்தார்.
Advertisment

இந்த சந்திப்பிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருநாவுக்கரசர்,

மகன் திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்ற நான் காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் பேசினேன். காங்கிரஸ் மற்றும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மெஜாரிட்டி பலத்தை இழந்து விட்டதால் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட வேண்டும் என்று கொடுத்த கடிதத்தின் மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டேன்.
Advertisment

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நம்பிக்கை இழக்கும் போது பெரும்பான்மை நிரூபிக்க வேண்டியது அவசியம். கவர்னரும் இந்த வி‌ஷயத்தில் தாமதம் செய்யக் கூடாது என்று கேட்டுக்கொண்டேன். அவர் சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை எடுப்பதாக உறுதி அளித்தார்.

அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிளவு அதைத் தொடர்ந்து கட்சி சின்னத்தை மீட்க அவர்கள் போராடுவது உள்கட்சி பிரச்சனை. எனவே அதில் தலையிட விரும்பவில்லை. ஆனால் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். தற்போதைய சூழ்நிலையில் முதலில் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். அதுதான் குழப்பங்களுக்கு தீர்வு தரும் என்றார்.
Advertisment