/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/311.jpg)
தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பிரணய் என்ற வாலிபரும், அம்ருதா என்ற இளம் பெண்ணும் காதல் திருமணம் செய்து கொண்டனர். அம்ருதா தனது பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி இந்த திருமணத்தை செய்து கொண்டார்.
வேறொரு சமூகத்தை சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டதால் அம்ருதாவின் பெற்றோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இதனிடையே அம்ருதா மூன்று மாத கர்ப்பிணியாக உள்ளார்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மிர் யல்குடா என்ற பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கர்ப்பிணி மனைவியை மருத்துவ ஆலோனைக்காக அழைத்து சென்றுள்ளார் பிரணய்.
பின்னர் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த பிரணய் மற்றும் அம்ருதாவை ஒருவர் பின்தொடர்ந்து வந்துள்ளார். பின்தொடர்ந்து வந்த அந்த நபர்பிரணய்யை தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த பிரணய் உயிரிழந்தார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/telengana-honor-killing.jpg)
பிரணயை கொலை செய்த வழக்கில, அம்ருதாவின் தந்தை, அவரது சித்தப்பா மற்றும் சிலரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகினறனர்.
அம்ருதா தற்போது அவரது மாமியார் வீட்டில் உள்ளார். கணவனை இழந்து வாடும் அம்ருதாவுக்கு, தமிழகத்தின் உடுமலைப்பேட்டையில் கணவர் சங்கரை கண்முன்னே இழந்து வாடும் கௌசல்யா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/301_0.jpg)
கௌசல்யாவுடன் சென்ற அவர் வழக்கறிஞர், அம்ருதாவிடம் உங்கள் கணவரை கொலை செய்ததற்கு என்ன காரணம்? என கேள்வி கேட்டார்.
அதற்கு அம்ருதா ‘சாதிதான் பிரச்சனை’ என பதிலளித்தார்.
பிரணய் கொலைக்கு காரணமானவர்களை தூக்கில் போட வேண்டும் என்று அம்ருதா கூறினார். இதனைத் கேட்ட கௌசல்யா, நீங்கள் நடந்ததை அனைத்தையும் நீதிமன்றத்தில் கூறுங்கள் என்றார்.
அப்போது குறுக்கிட்ட கௌசல்யா வழக்கறிஞர், தனது பெற்றோரின் ஜாமீன் மனுவை கௌசல்யா 58 முறை எதிர்த்தார் என்று அம்ருதாவிடம் கூறினார். அவர்களின் சந்திப்பு உருக்கமாக இருந்தது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)