Kaunthappadi sugar in Palani Panchamiratham again after six years!

பழனிக்கு போனால் பஞ்சாமிர்தம் வாங்கி வருவது மக்களின் வழக்கம். அந்த பஞ்சாமிர்தம் அவ்வளவு சுவையாக இருக்கும். பழனி முருகன் கோயில் தேவஸ்தானம் சார்பில் சென்ற 25 ஆண்டுகளாக ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகளிடமிருந்து நேரடியாக நாட்டு சர்க்கரை கொள்முதல் செய்து வந்த நிலையில் கடந்த ஆறு ஆண்டுகளாக அது நிறுத்தி வைக்கப்பட்டது.

Advertisment

அந்த நாட்டு சக்கரை கொள்முதலை மீண்டும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் 14ஆம் தேதி தொடங்கி வைத்தார். இதனால் கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இடையில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக பழனி தேவஸ்தானம் நாட்டு சர்க்கரையை கொள்முதல் செய்வதை நிறுத்தியது.

Advertisment

இதனால் கரும்பு விவசாயிகள் கடும் இழப்பீடுகளை சந்தித்து வந்தனர். பழனி தேவஸ்தானம் மீண்டும் நாட்டு சர்க்கரையை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் முதல்வர் எடப்பாடி பழனசாமியுடன் கலந்து ஆலோசித்ததை தொடர்ந்து மீண்டும் நாட்டு சர்க்கரை கொள்முதல் செய்ய தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில் 6 வருடங்களுக்கு பிறகு பழனி தேவஸ்தானம் பஞ்சாமிர்தம் தயாரிக்க நாட்டு சர்க்கரையை கொள்முதல் செய்யும் பணியை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் மற்றும் மாவட்ட ஆட்சியர் கதிரவன் ஆகியோர் 15ஆம் தேதி தொடங்கி வைத்தனர். விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் நாட்டு சர்க்கரையை 60 கிலோ மூட்டைக்கு ரூ.2,490 வீதம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டு சர்க்கரையை உற்பத்தி செய்யும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நாட்டு சர்க்கரை தரம் குறித்து பழனி தேவஸ்தான அதிகாரிகள் விவசாயிகளிடம் அறிவுறுத்தினர்.