
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ம.கொளக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி பிரியங்கா. இவரது ஒரு வயது மகள் மீனலோசனி. கடந்த வாரம் குழந்தை மீனலோசினியை தூக்கில் தொங்க விட்டுத் தாய் பிரியங்காவும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இது சம்பந்தமாக பிரியங்காவின் சகோதரர் பிரசாந்த் காட்டுமன்னார்கோவில் போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரில், பாலமுருகன் பிரியங்காவை வரதட்சணை கேட்டுக் கொடுமை படுத்தினார். அதன் காரணமாக குழந்தையோடுதாயும்தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிவித்துள்ளார். இதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனர்.
அதில் பாலமுருகன் பல பெண்களுடன் வழக்கம் வைத்திருப்பதுடன் பிரியங்காவை வரதட்சணை வாங்கி வருமாறு தொடர்ந்து துன்புறுத்தி வந்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டது உண்மை எனத் தெரியவந்தது. இதையடுத்து பாலமுருகன் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Follow Us