வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றி வந்தனர். அதேபோல் புகழ்பெற்ற சி.எம்.சி மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான வெளிமாநில, குறிப்பாக வடகிழக்கு மாநில மக்கள் வந்து தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கரோனா ஊரடங்கு சமயத்தில் இவர்கள் பெரும் துன்பத்துக்கு ஆளாகினர். இதனால் அவர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்தனர். மத்திய பாஜக அரசு, ரயில் சேவை, விமான சேவையை நிறுத்தியதால் தொழிலாளர்கள், மருத்துவத்துக்காக வந்தவர்களால் சொந்த மாநிலத்துக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.
மறைமுகமாக சரக்கு லாரிகளிலும், நடந்தும் சென்றனர். இதனால் மத்திய பாஜக அரசு மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. இருந்தும் அவர்கள் பெரியதாக இதில் நடவடிக்கை எடுக்கவில்லை. மகாராஷ்டிராவில் இருந்து நடந்து சென்ற தொழிலாளர்கள் பலர் இறந்தது நாடு முழுவதும் கொதிப்பை ஏற்படுத்தியது. அதன் பின்பே மத்திய – மாநில அரசுகள் இதில் கவனம் எடுத்து.
தமிழகத்தில் உள்ள தொழிலாளர்கள், மருத்துவபணிக்காக வந்தவர்கள், மாணவர்கள் போன்றவர்களை அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பிவைக்க கணக்கு எடுத்தனர். வேலூர் மாவட்டத்தில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 5 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் இருப்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து முதல் கட்டமாக 1,132 பேருடன் முதல் ரயில் ஜார்கண்ட் மாநிலத்துக்கு கடந்த வாரம் சென்றது. அதன்பின் அடுத்தடுத்து 3 ரயில்கள் பிற மாநிலங்களுக்கு சென்றன.
ஐந்தாவது கட்டமாக மே 12ந் தேதி மேற்குவங்க மாநிலத்திற்கு 2வது சிறப்பு ரயில் புறப்பட்டது. சிறப்பு பேருந்துகள் மூலம் தொழிலாளர்கள், மருத்துவ சிகிச்சைக்காக வந்தவர்களை ஒருங்கிணைத்து அழைத்து வந்தனர். ஒரு பேருந்துக்கு 25 முதல் 30 பயணிகளை ஏற்றிக்கொண்டு 50 பேருந்துகள் பேருந்துகளில் அழைத்துவரப்பட்டனர். பயணிகள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்து, இரண்டு வேளைக்கான உணவு, குடிநீர் ஆகியவற்றை வழங்கி சமூக இடைவெளியோடு ரயில் பெட்டிகளில் 1464 பேராக அமர வைக்கப்பட்டனர்.
முற்பகல் 12.00 மணி அளவில் மேற்குவங்க மாநிலம் கரப்பூர் செல்லும் சிறப்பு ரயில் காட்பாடி ரயில்வே ஜங்ஷனிலிருந்து புறப்பட்டது. ரயில் நிலையத்திற்கு வருகை தந்த பயணிகளை ஒழுங்கு படுத்துவதற்காக வருவாய் துறை, காவல்துறை, பொது சுகாதாரத்துறை, உள்ளாட்சி துறை, இரயில்வே துறையினருடன் இணைந்து இந்தியன் ரெட் கிராஸ் சங்கத்தினரும் பணியாற்றினர்.
​
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-05/katpadi_railway_station_01.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-05/katpadi_railway_station_03.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-05/katpadi_railway_station_02.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-05/katpadi_railway_station_04.jpg)