Skip to main content

வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி சொல்ல தொடங்கிய கதிர்ஆனந்த்... உருவான சர்ச்சை!

Published on 03/09/2019 | Edited on 03/09/2019

தனியாக நடைபெற்ற வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தலில் அதிமுக சின்னத்தில் போட்டியிட்ட புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்தை திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த், 8100 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

இடைத்தேர்தலைப்போல் நடைபெற்ற இந்த தேர்தலில் தங்கள் கட்சி வேட்பாளரை மக்கள் வெற்றி பெற மக்களுக்கு நன்றி சொல்லும் விதமாக வேலூர் தொகுதி பிரச்சாரத்துக்கு வந்த ஸ்டாலின், தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய அதே வாணியம்பாடி நகரிலேயே நன்றி அறிவிப்பு கூட்டம் நடத்தச்சொன்ன திமுக தலைவர் ஸ்டாலின் அதில் தானே வந்து கலந்துக்கொண்டு நன்றி சொல்வதாக கூறினார்.

 

 kathri anand started to thank the people... controversy created!

 

அதன்படி ஆகஸ்ட் 18ந் தேதி நன்றி அறிவிப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதிகமாக மழை பெய்ததால் ஆகஸ்ட் 25ந்தேதியென நன்றி அறிவிப்பு கூட்டம் மாற்றி வைக்கப்பட்டது. ஆகஸ்ட் 25ந்தேதிக்கு முன்பும் அதிகமாக மழை பெய்ததால் ஏற்பாடுகள் செய்ய முடியாமல் கட்சி நிர்வாகிகள் தடுமாறினர். இதனால் அந்த தேதியில் நடைபெறவிருந்த கூட்டமும் ரத்து செய்யப்பட்டது. மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தலைமை கழகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், தன்னை வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி சொல்லும் விதமாக முதல் கட்டமாக சமுதாய அமைப்புகளை சந்தித்து நன்றி கூறி வருகிறார் வேலூர் தொகுதி எம்.பியான திமுகவை சேர்ந்த கதிர்ஆனந்த். அதன்படி செப்டம்பர் 3ந்தேதி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேலூர் மேற்கு மாவட்டத் தலைவர்  நிசார் அஹமது இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுயிருந்த தேநீர் விருந்தில் கலந்துக்கொண்டு இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் தலைவர்கள், ஜமாத் நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், முக்கிய பிரமுகர்கள் என பலருக்கும் நன்றியை கூறினார்.

இதுப்பற்றி பேசும் வேறு சிலர், முக்கிய பிரமுகர்கள் மட்டும் தான் வாக்களித்தார்களா?, நாங்கள் எல்லாம் வாக்களிக்கவில்லையா என சர்ச்சையை கிளப்பியுள்ளனர்.

திமுக தலைவர் ஸ்டாலின் எப்போது நன்றி சொல்ல வேலூர் தொகுதிக்கு வருகிறார் என கட்சி வட்டாரத்தில் விசாரித்தபோது, வரும் செப்டம்பர் 15ந்தேதி, திருவண்ணாமலை நகரில் கட்சியின் முப்பெரும் விழா நடைபெறுகிறது. அந்த விழா முடிவுற்றபின்பே ஸ்டாலின் இங்கு நன்றி சொல்ல வரும் தேதி என்ன என்பதை முடிவு செய்வார் என்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

ரூ. 20 லட்சம் வரை சொத்து சேர்த்த பஞ்சாயத்து கிளார்க்; லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anti-corruption department raids panchayat clerk house

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவர் காட்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் தற்போது பொன்னை அடுத்த பாலேகுப்பத்தில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியில் உள்ளார்.

2011 - 2017 ஆகிய இடைப்பட்ட காலகட்டத்தில் பணியின் போது வருமானத்திற்கு அதிகமாக சுமார் 20 லட்சம் வரை சொத்து சேர்த்ததாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் பிரபு மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை அடுத்து இன்று வேலூர் லஞ்ச ஒழிப்புத் துறையினர் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியில் உள்ள பஞ்சாயத்து கிளார்க் பிரபு என்பவரின் வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சோதனையில் வங்கி பரிவர்த்தனை மற்றும் சொத்து தொடர்பான ஆவணங்கள், பிரபுவின் வருமானம் தொடர்பான ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.