திருவாரூர் அருகே விஷவண்டுகள் கடித்ததில் 30 க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது, விஷ வண்டுகளை உடனடியாக அழிக்க வேண்டுமென அரசுக்கு அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7394694274" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
திருவாரூர் அருகே உள்ள செம்மங்குடி கிராமத்தில் சமீபத்தில் இறந்த ஜெயராமன் என்பவரின் கருமாதி சடங்கு சோழ சூடாமணி ஆற்றங்கரையில் நடைபெற்றது. இதில் அப்பகுதி சேர்ந்தவர்களும், உறவினர்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது புரோகிதர் புளியமரத்தடியின் கீழ் அருகில் கிடந்த குச்சிகளைவைத்து தீ மூட்டியுள்ளார்.
இதிலிருந்து வெளிப்பட்ட புகையால் அருகில் இருந்த மரங்களிலிருந்த கதண்டு என்கிற விச வண்டுகள் பறந்து வந்து அங்கிருந்தவர்களை பதம்பார்த்தது. இதில் 30க்கும் மேற்பட்டோர் முகம், கண் இமை பகுதி, தலை என வண்டு கடியால் காயமடைந்தனர். அங்கிருந்த மற்றவர்களோ அலறியடித்து ஒட்டம் பிடித்து தப்பினர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="2374301885" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள அரசவனங்காடு ஆரம்ப சுகாதர நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்த மருத்துவர்கள்விஷவண்டு தாக்குதலுக்குள்ளானவர்களை மேல் சிசிக்சைக்காக திருவாருர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினார்.
இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "சோழ சூடாமணி ஆற்றங்கரையில் உள்ள புளியமரம், அரச மரம் உள்ளிட்டவற்றில் நீண்ட நாட்களாக கதண்டு என்கிற விஷவண்டுகள் கூடுகட்டி அதிக அளவில் இருந்து வருகின்றன. இந்த ஆற்றங்கரை பாதையானது மக்கள் அன்றாடம் சென்று வரும் பிரதான பாதையாகும்.பலமுறை அரசாங்கத்திடம் கூறிவிட்டோம், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டதால், இன்று முப்பதுபேரை கடித்துவிட்டது. கருமாதி வீடே பீதியாகிவிட்டது. எனவே காவல்துறையினரும், தீ அணைப்புத்துறையினரும் உடனடியாக, உயிர் சேதம் ஏற்படுமுன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றனர்.