Advertisment

வீரமரணம் அடைந்த தமிழக வீரர்களின் குடும்பத்திற்கு 20 லட்சம்!முதல்வர் அறிவிப்பு!

sc

Advertisment

காஷ்மீரில் புலவாமா மாவட்டம் அவந்திப்போராவில் துணை ராணுவ வீரர்கள் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

வீரமரணம் அடைந்த வீரர்களில் இரண்டு பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம் சவலப்பேரி கிராமத்தை சேர்ந்த கணபதி என்பவரின் மகன் சுப்பிரமணியன், அரியலூர் மாவட்டம் கார்குடியை சேர்ந்த சின்னையன் என்பவரின் மகன் சிவசந்திரன் ஆகியோர் ஆவார். இவர்களது உடல்கள் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது.

இந்தநிலையில் வீரமரணம் அடைந்த இந்த இரண்டு வீரர்களுக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கலையும், அவர்களது குடும்பத்தாருக்கு அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார். அரியலூர் கார்குடி சிவசந்திரன், தூத்துக்குடி சவலப்பேரி சுப்பிரமணியன் ஆகியோர் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

Kovilpatti Ariyalur kasmir
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe