Kasimedu people

Advertisment

சென்னையில் கரோனா பாதிப்பு 906 ஆக அதிகரித்து உள்ளது. அதனைக் கட்டுப்படுத்த நான்கு நாட்கள் சென்னை மாநகராட்சி முழுவதும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், மக்கள் வெளியே செல்லும்போது கண்டிப்பாகத் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்கவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. எனினும் சென்னை, காசிமேடு பகுதியில் வசிக்கும் மக்கள் லாரியில் வரும் குடிநீரைப் பிடிப்பதற்காகத் தனிமனித இடைவெளியை மறந்து போட்டிப்போட்டுக்கொண்டு நெருக்கமாக நின்றனர்.