கரூர் மாநகரில் உள்ள திரு.வி.க சாலையில் வசித்து வரும் இளமுருகன் என்கிற கார்த்தி (வயது 34), தனது மனைவியுடன் சேர்ந்து துணிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை கணவன், மனைவி இருவரும் கடையில்இருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள்இரண்டு பேர் கடையில் புகுந்து கார்த்தியை அரிவாளால் தாக்கிவிட்டுத்தப்பியோடி விட்டனர்.
கை மற்றும் முதுகு பகுதியில் காயங்களுடன் வெளியில் வந்த கார்த்தி, அந்த இரு இளைஞர்களையும் பிடிக்க முயன்றபோது அவர்கள் தப்பியோடி விட்டனர். இதனைத்தொடர்ந்து கார்த்தியை அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம்மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த மாநகர காவல் நிலைய போலீசார் அருகில் உள்ள கடையில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கார்த்திக்கு,இரண்டு தலைமுறைகளாக இருந்து வரும் சொத்துப் பிரச்சினை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Follow Us