Karur women complaint against unidentified person who assaulted her

கரூர் மாவட்டம் அங்காளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சாஷிக்கா (23). இவர் கடந்த 15ஆம் தேதி இரவு திருச்சியில் இருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில்உள்ள பிரபல உணவகம் அருகே நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த அடையாளம் தெரியாத நான்கு நபர்கள் அவரை பாலியல் உறவுக்கு அழைத்துள்ளனர். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்பட்டுள்ளது.

Advertisment

இதையடுத்து மீண்டும் கடந்த 16ஆம் தேதி இரவு அதே பகுதியில் நின்று கொண்டிருந்த சாஷிக்காவை அடையாளம் தெரியாத நான்கு நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து அவரை தகாத வார்த்தைகளால் பேசியதோடு சரமாரியாக தாக்கி அரிவாளால்அவருடைய தலையில் வெட்டிஉள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கோட்டை காவல் நிலையத்தில் சாஷிக்காகொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment