Advertisment

162 கோடி கடனில் சரவணா ஸ்டோர்ஸ்? நோட்டீஸ் அனுப்பிய வங்கி நிர்வாகம்... பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!

தமிழகம் முழுவதும் மிகவும் பிரபலமான சரவணா ஸ்டோர்ஸ் கடையின் விளம்பரதாரர்கள் மற்றும் சரவணா ஸ்டோர்ஸ் தங்க மாளிகை உரிமையாளருக்கு ரூபாய் 162 கோடி கடனுக்காக வங்கி நோட்டீஸ் அனுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சரவணா ஸ்டோர்ஸ் கடையின் விளம்பரதாரர்கள் மற்றும் சரவணா ஸ்டோர்ஸ் தங்க மாளிகை மற்றும் அதன் புரோமோட்டர்ஸ்கள் கரூர் வைஸ்யா வங்கியிலிருந்து ரூபாய் 162 கோடி கடன் பெற்றுக்கொண்டு இன்னும் திருப்பி செலுத்தவில்லை என அந்த வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் சரவணா ஸ்டோர்ஸ் கோல்ட் பேலஸ் லிமிடெட் மற்றும் அதன் பாதுகாவலர்களான யோகரத்தினத்தின் மகன் பல்லாகு துரை, அவரது மனைவி சுஜாதா மற்றும் மகன் ஷிரவன் உள்ளிட்டவர்களுக்கு கரூர் வைஸ்யா வங்கி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Advertisment

saravana stores

மேலும் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ள 162.80 கோடி ரூபாய் தொகையை உடனடியாக திருப்பிச் செலுத்துமாறு சரவணா ஸ்டோர்ஸ் கோல்ட் பேலஸ் உரிமையாளர் பல்லாகு துரையிடம் கரூர் வைஸ்யா வங்கி அறிவிறுத்தியுள்ளதாக கூறுகின்றனர். கடன் வாங்குபவர் தொகையை திருப்பிச் செலுத்தத் தவறினால், சொத்துக்களை கையகப்படுத்த வங்கி நோட்டீஸ் அனுப்பும் என்று தெரிவிக்கின்றனர். ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக சரவணா ஸ்டோர்ஸ் தரப்பிலிருந்து இன்னும் எந்த விளக்கமும் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை என்பது குறிப்படத்தக்கது.

complaint Notice Bankloan saravana store
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe