Skip to main content

162 கோடி கடனில் சரவணா ஸ்டோர்ஸ்? நோட்டீஸ் அனுப்பிய வங்கி நிர்வாகம்... பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!

Published on 10/01/2020 | Edited on 10/01/2020

தமிழகம் முழுவதும் மிகவும் பிரபலமான சரவணா ஸ்டோர்ஸ் கடையின் விளம்பரதாரர்கள் மற்றும் சரவணா ஸ்டோர்ஸ் தங்க மாளிகை உரிமையாளருக்கு ரூபாய் 162 கோடி கடனுக்காக வங்கி நோட்டீஸ் அனுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சரவணா ஸ்டோர்ஸ் கடையின் விளம்பரதாரர்கள் மற்றும் சரவணா ஸ்டோர்ஸ் தங்க மாளிகை மற்றும் அதன் புரோமோட்டர்ஸ்கள் கரூர் வைஸ்யா வங்கியிலிருந்து ரூபாய் 162 கோடி கடன் பெற்றுக்கொண்டு இன்னும் திருப்பி செலுத்தவில்லை என அந்த வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் சரவணா ஸ்டோர்ஸ் கோல்ட் பேலஸ் லிமிடெட் மற்றும் அதன் பாதுகாவலர்களான யோகரத்தினத்தின் மகன் பல்லாகு துரை, அவரது மனைவி சுஜாதா மற்றும் மகன் ஷிரவன் உள்ளிட்டவர்களுக்கு கரூர் வைஸ்யா வங்கி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 

saravana stores



மேலும் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ள 162.80 கோடி ரூபாய் தொகையை உடனடியாக திருப்பிச் செலுத்துமாறு சரவணா ஸ்டோர்ஸ் கோல்ட் பேலஸ் உரிமையாளர் பல்லாகு துரையிடம் கரூர் வைஸ்யா வங்கி அறிவிறுத்தியுள்ளதாக கூறுகின்றனர். கடன் வாங்குபவர் தொகையை திருப்பிச் செலுத்தத் தவறினால், சொத்துக்களை கையகப்படுத்த வங்கி நோட்டீஸ் அனுப்பும் என்று தெரிவிக்கின்றனர். ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக  சரவணா ஸ்டோர்ஸ் தரப்பிலிருந்து இன்னும் எந்த விளக்கமும் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை என்பது குறிப்படத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

Next Story

தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
Supreme Court Notice to Election Commission

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் ஒப்புகைச் சீட்டுகளை (V.V.P.A.T. - Voter-verified paper audit trail) முழுமையாக எண்ணக் கோரி ஏ.டி.ஆர். என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தது. அதில், “விவிபேட் (V.V.P.A.T.) இயந்திரங்களில் பதிவாகும் மொத்த ஒப்புகைச் சீட்டுகளில் 5 சதவீத ஒப்புகைச் சீட்டுகள் மட்டுமே எண்ணப்பட்டு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்கு எண்ணிக்கையோடு ஒப்பீடு செய்யப்படுகின்றன. எனவே தேர்ந்தெடுக்கப்பட்ட 5 சதவீத விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளை மட்டும் சரிபார்ப்பதற்கு மாறாக 100 சதவீதம் முழுமையாக ஒப்பிட்டுச் சரிபார்க்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், “கூடுதல் அலுவலர்களை நியமித்து விவிபேட் இயந்திரத்தில் பதிவான அனைத்து ஒப்புகைச் சீட்டுகளையும் எண்ணுவதற்கு கூடுதலாக 6 மணி நேரம் மட்டுமே தேவைப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இது குறித்து தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.