Advertisment

கிணற்றில் விழுந்த பசு மாடு; சாதுரியமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்

karur velliyanai neraset cow into well safety recover 

Advertisment

கிணற்றில் விழுந்து உயிருக்குப்போராடிய பசு மாடு ஒன்றைதீயணைப்பு மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

கரூர் மாவட்டம், வெள்ளியனை அடுத்த தாளியாப்பட்டி கிராமத்தில் பெரியசாமி என்பவருக்குச் சொந்தமான பசு மாடு எதிர்பாராத விதமாக 60 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து விட்டதாகக் கரூர் தீயணைப்பு மீட்புப் பணிகள் நிலையத்திற்கு அப்பகுதியினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலின் பேரில், கரூர் தீயணைப்பு நிலைய உதவி மாவட்ட அலுவலர் திருமுருகன் தலைமையில் அப்பகுதிக்கு விரைந்து சென்ற மீட்புப் படையினர், கயிறு மூலம் பசு மாட்டைக்கட்டி அனைவரும் ஒன்று சேர்ந்து மேலே இழுத்து பத்திரமாக மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

cow karur Rescue well
இதையும் படியுங்கள்
Subscribe