karur vangal odaiyur mango farms tenant  thangavel  couple incident 

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த தம்பதிகளான தங்கவேல் (வயது 65) மற்றும் தைலி (வயது 61) ஆகிய இருவரும் கரூர் மாவட்டம் வாங்கல் அடுத்த ஓடையூர் பகுதியில் உள்ள சரவணன் என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பில் கடந்த 15 வருடங்களாக தோட்டத்தை குத்தகைக்கு எடுத்துவிவசாயம் செய்து வந்துள்ளனர்.

Advertisment

இந்த நிலையில் இன்று காலை தோட்டத்து வீட்டில் தம்பதியர் இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். தலை மற்றும் உடம்பு பகுதியில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், இவர்கள் மீது கொலையாளிகள் கல்லை போட்டு கொலை செய்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் நகைக்காக கொலை செய்தார்களா அல்லது முன் விரோதம் காரணமாக கொலை செய்தார்களா என பல்வேறு கோணங்களில்போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisment

சம்பவ இடத்தில் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் வாங்கல் காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மாவட்ட எஸ்.பி சுந்தரவதனம் நேரில் ஆய்வு செய்தார். இந்த சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. மேலும் போலீசார் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகிறார்கள்.