Advertisment

தனிப்பட்ட என்னால் எதுவும் செய்ய முடியாது ! உருக்கமாக புலம்பும் தம்பித்துரை ! 

கரூர் எம்பி தொகுதியில் கரூர், அரவாக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், வேடசந்தூர் விராலிமலை, மணப்பாறை சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது.

Advertisment

t

கரூர் எம்.பி. தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஜோதிமணியும், அமமுக சார்பில் தங்கவேல் , அதிமுக சார்பில் சிட்டிங் எம்.பியும் தொடர்ந்து 10 வருடம் எம்.பி.யாக இருந்த தம்பித்துரை இந்த முறையும் போட்டியிடுகிறார்.

Advertisment

அமமுக வேட்பாளர் போட்டியில் இல்லை என்கிற நிலை இருந்தாலும் தம்பித்துரைக்கும், ஜோதிமணிக்கும் இடையே தேர்தல் களம் பயங்கர பரபரப்பாக இருந்தாலும் வார்த்தை போர் தொடர்ச்சியாக நடந்து கொண்டே இருக்கிறது. சமீபத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்த பொதுக்கூட்டத்தில் பேசி ஜோதிமணி நாங்கள் கல்விகடன், விவசாயகடனை தள்ளுபடி செய்கிறோம். நீங்கள் தம்பித்துரையை தள்ளுபடி பண்ணுங்கள் என்று பேசினார்.

இந்த நிலையில் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு உள்ள ராஜாளி பட்டி, மேட்டுப்பட்டி, ராஜகிரி விராலிமலை ஆகிய ஊர்களில் அதிமுக வேட்பாளர் தம்பிதுரை பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது கடந்த 10 ஆண்டுகளாக எம்பியாக இருந்து வருகிறேன். எத்தனை முறை நான் இங்கு வந்துள்ளேன் என்பது இங்குள்ள மக்களுக்கு தெரியும்.

t

பலமுறை கலெக்டருடன் வந்து பொது மக்களின் குறைகளைக் கேட்டு நிவர்த்தி செய்துள்ளேன். அதிமுக வெற்றி பெறச் செய்து மக்கள்தான் அவர்களுக்கு தேவையான வளர்ச்சித் திட்டங்களை அதிமுக அரசுதான் செய்து கொடுத்துள்ளது. தனிப்பட்ட தம்பித்துரை ஆள் எதுவும் செய்ய முடியாது.

விராலிமலை முருகன் கோவில் பகுதிக்கு பஸ் நிலையம் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. ஐடி கொண்டு வரப்பட்டுள்ளது. தாலுகா அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இது போன்ற தேவைகளை தான் எனது பதவியை பயன்படுத்தி பெற்றுத்தர முடியும்.

கடந்த தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஜோதிமணி ஒருமுறையாவது தொகுதிக்குள் வந்தாரா குறைகளை கேட்டறிந்தாரா? இப்போது தேர்தல் அறிவித்த உடன் மீண்டும் வேட்பாளர் என்கிற முறையில் ஓட்டு கேட்டு வருகிறார். பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். அதை நான் தவறாமல் செய்து வருகிறேன் என்று உருக்கமாக புலம்ப ஆரம்பித்திருக்கிறார்.

jothimani Thambidurai karur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe