Skip to main content

ஆன்லைன் மோசடி; மகளின் கவனக்குறைவால் பணமிழந்த தாய்!

Published on 01/06/2022 | Edited on 01/06/2022

 

karur teacher online scams cyber crime police investigation

 

கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம் காவேரி நகர் பகுதியை சேர்ந்தவர் கலைமணி (52). இவர் கரூர் அடுத்த தாளியாபட்டி அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியராக  பணியாற்றி வருகிறார். கடந்த 11.04.2022 அன்று வங்கி அதிகாரி என்ற பெயரில், மர்ம நபர் ஒருவர் இவருக்கு போன் செய்துள்ளார். சந்தேகம் அடைந்த ஆசிரியர் கலைமணி இணைப்பை துண்டித்து விட்டு, வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். 

 

அப்போது ஆசிரியரின் செல்போன் எண்ணுக்கு வந்த வங்கி தொடர்பான போலியான லிங்கை அவரது மகள் கிளிக் செய்து ஆசிரியரின் வங்கி பதிவு செல்போன் எண்ணுக்கு வந்த OTP எண்ணை பதிவிட்டுள்ளார். 5 நாட்களுக்கு பிறகு தனது வங்கி கணக்கில் பணம் எடுப்பதற்காக ஏடிஎம் சென்று ஆசிரியர் கலைமணி பார்த்தபோது, ரூ. 2 லட்சத்து 99 ஆயிரத்து 900 எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், மற்றொரு வங்கிக் கணக்கில் ரூ. 25 ஆயிரம் எடுக்கப்பட்டுள்ளது. மொத்தமாக அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 3.24 லட்சம் மோசடியாக கையாடல் செய்யப்பட்டது அவருக்கு தெரிய வந்துள்ளது.

 

அதிர்ச்சி அடைந்த ஆசிரியர் கலைமணி கரூர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில், மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர் குறித்து கரூர் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

மக்களே உஷார்; சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Cybercrime cops warn against sharing photos on social media

சமூக வலைத்தளங்களில் போட்டோக்களை பகிர்வதைத் தவிர்க்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஆன்லைன் வர்த்தகம், வேலை வாய்ப்பு, லோன் தருவது, கிரெடிட் கார்டு லிமிட் அதிகரித்து தருவது, தவறான பார்சல் அனுப்பி இருப்பது, பான் - ஆதார் கார்டை வங்கி கணக்கில் சேர்ப்பது, வங்கி ஏடிஎம் கார்டை புதுப்பித்தல், போலியான கஸ்டமர் கேர் நம்பருக்கு போன் செய்வது, மலிவு விலையில் பொருட்கள், ஆன்லைனில் விற்பனை போன்ற எந்த வகையான சைபர் கிரைம் குற்றங்களிலும் பணத்தை இழக்க வேண்டாம்.

சமூக வலைத்தளங்களில் கிவ் - அப் போன்று வரும் லிங்கை கிளிக் செய்து யூசர் ஐடி மற்றும் ஓடிபி எண் பகிர்வது, சமூக வலைத்தளங்களில் தன் போட்டோவை அனைவரும் பார்க்கும்படி பொதுவாக பகிர்வதை தவிர்க்க வேண்டும். ஆன்லைன் மோசடியில் பணம் இழப்பு ஏற்பட்டவுடன் அல்லது 24 மணி நேரத்திற்குள் சைபர் கிரைம் உதவி எண் 1930-க்கு புகார் அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.