Skip to main content

முதியவர் எரித்து கொலை? - உறவினர்கள் சாலை மறியல்

 

karur senior citizen incident relatives blocked road

 

கரூரில் முதியவர் எரித்துக் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் குற்றவாளியைக் கைது செய்யாத காவல்துறையைக் கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 

கரூர் மாவட்டம், மாயனூர் அடுத்த ராசா கவுண்டனூர் பகுதியில் கருப்பண்ணன்(வயது 72) என்ற முதியவர் உடல் எரிந்த நிலையில் நேற்று மீட்கப்பட்டார். நிலம் சம்பந்தமாக அண்ணன் கருப்பண்ணன், தம்பி காத்தவராயன் ஆகிய இருவருக்குள் ஏற்பட்ட பிரச்சனை காரணமாகத் தென்னந்தோப்பில் எரித்துக் கொலை செய்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் 24 மணி நேரம் ஆகியும் குற்றவாளியைக் கைது செய்யவில்லை எனக் காவல்துறையைக் கண்டித்து காந்திகிராமம் பகுதியில் கரூர் - திருச்சி நெடுஞ்சாலையில் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

சுமார் அரை மணி நேரம் போராட்டத்தின் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசார் மற்றும் அதிகாரிகள் உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, உடலைப் பெற்றுக் கொள்வதற்கு முன்பாக வழக்குப் பதிவு செய்து, குற்றவாளி கைது செய்யப்படுவார் என்று தெரிவித்ததன் பேரில் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !