karur school students incident

Advertisment

பட்டியல் சமூக மாணவர் மீது தாக்குதல் நடத்திய 12 ஆம் வகுப்பு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கரூர் மாவட்டம் உப்பிட்டமங்கலத்தில் 10 ஆம் வகுப்பு படிக்கும் பட்டியல் சமூக மாணவருக்கும், வேறு பள்ளியில் படித்து வரும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் இடையே பள்ளி முடித்து பேருந்தில் செல்லும் போது பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனையை மனதில் வைத்து அடுத்த நாள் பட்டியல் சமூக மாணவர் வந்த பேருந்தில் ஏறி, வேறு பள்ளியில் படிக்கும் 12 ஆம் வகுப்பு படிக்கும், 10 மாணவர்கள் தாக்கியுள்ளனர். மேலும் அந்த மாணவரின் வீட்டுக்குச் சென்று மாணவரின் பாட்டியையும் தாக்கியுள்ளனர். இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து தாக்குதல் நடத்திய 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.