karur police filed case for admk former minister

கரூரில் போக்குவரத்துக்கு இடையூறாக அதிமுகவினர் பொதுக்கூட்டம் நடத்தியதாக முன்னாள் அமைச்சர்கள் மீது கரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Advertisment

கரூரில் கடந்த 2ம் தேதி திமுகவுக்கு எதிராக அதிமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வேலுச்சாமிபுரம் பகுதியில் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டமானது பொது அமைதிக்குக்குந்தகம்ஏற்படுத்தும் வகையிலும், போக்குவரத்திற்கு இடையூறாகச் சாலையை மறித்து பொதுக்கூட்டம் நடத்தியது, தடை செய்யப்பட்ட பிளக்ஸ் பேனர்களை பயன்படுத்தியது மற்றும் பொது இடத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்த வீடியோக்களை வெளியிட்டு, இரண்டு கட்சிகளுக்கு இடையே பிரச்சனை ஏற்படுத்தும் விதமாகச் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.

Advertisment

இந்தக் காரணங்களை முன்வைத்து கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சின்னசாமி உள்ளிட்ட அதிமுகவினர் மீது கரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனால் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.