Karur old lady passed away

கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் அருகே ராசாகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் மனைவி ராஜம்மாள் (80). இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் ராஜம்மாள் உடல்நிலை பாதிப்பால் நேற்று காலமானார். அவரது உடல் இன்று சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல முற்பட்டபோது, அருகே குடியிருக்கும் கருப்பண்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் உடலை எடுத்துச் செல்லும் பாதையை மறித்து டிராக்டர் மற்றும் மரம் செடி உள்ளிட்டவைகளை கொண்டு அடைத்தனர். இதனால் உடலை எடுத்துச் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisment

சம்பவம் அறிந்து கரூர் தாசில்தார் சிவக்குமார் தலைமையில் வெள்ளியனை காவல்துறையினர் உள்ளிட்டோர் 5 மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது கோவிந்தன், கருப்பண்ணனுக்கு இடத்தை விற்கும்போது வண்டி பாதை உள்ளது என்று விற்பனை செய்துள்ளார். ஆனால் இடத்தை வாங்கிய கருப்பண்ணன் இதில் நடந்து செல்வதற்கு மட்டுமே வழி என்று குறிப்பிட்டு எழுதி வாங்கியதாக தெரிகிறது. ஆனால் வண்டிப்பாதை இருப்பதாக கூறி கோவிந்தனின் மனைவி உடலை எடுத்துச் செல்ல வேண்டும் என வாக்குவாதம் செய்துள்ளனர்.

Advertisment

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து 5 மணி நேரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட தாசில்தார், காவல்துறையினர் கருப்பண்ணன் பேச்சுவார்த்தைக்கு உடன்படாத நிலையில், இறந்தவரின் உடலை புறம்போக்கு சாலை வழியாக எடுத்து செல்ல வலியுறுத்தினர். இடத்தை விற்றுவிட்டோம் வேறு வழியில்லாமல் என்ன செய்வதென்று தெரியாமல் உடலை ஆத்துவாரி வாய்க்கால் வழியாக மேடு, பள்ளத்தில் அதிக தூரம் உடலை எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர்.