ADVERTISEMENT

தமிழக பாஜக தலைவர்கள் எங்களை விமர்சிக்கிறார்கள்- தம்பிதுரை பேட்டி

08:48 PM Mar 07, 2019 | bagathsingh


கரூர் நாடாளுமன்றத்தில் உள்ள புதுக்கோட்டை மாவட்டம் அமைச்சர் விஜயபாஸ்கரின் விராலிமலை சட்டமன்றத் தொகுயில் அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லாமலேயே பல கிராமங்களில் சில நாட்களாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறார்.

ADVERTISEMENT


இன்று மெய்யனம்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த தம்பிதுரை கூறுகையில், ‘’நாட்டை காப்பாற்றத் தான் திமுக - காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. ஸ்டாலின் கூறுவது தவறு. அப்படி எண்ணம் இருந்தால் 11 ஆண்டுகாலம் காங்கிரஸ் கூட்டணியில் இருந்த திமுக அதை ஏன் செய்யவில்லை. 2014 மன்றத்தேர்தலில் திமுக, காங்கிரஸ் உடன் சேராமல் தனித்து போட்டியிட்டது.

ADVERTISEMENT

தேர்தல் நேரத்தில் பல கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேசுவது இயல்பு. ஆனால் தேமுதிக துணை பொச் செயலாளர் சுதீஷ் பேசியதை துரைமுருகன் வெளியே கூறி அக்கட்சியை அவமான படுத்தி உள்ளார்.


கூட்டணி வைத்து தான் அதிமுக வெற்றி பெறும் என்ற நிலை இல்லை. கடந்த தேர்தல்களில் அதிமுக தனித்து நின்றே பல வெற்றிகளை பெற்றுள்ளது. எனினும் தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இரு கட்சிகளுக்கு இடையே நிலவும் கருத்து வேறுபாடு களையபட்ட பின் கூட்டணி அமைந்து விடும். தேமுதிக அதிமுகவுடன் இணைய வேண்டும் என்பதே எங்களின் ஆவல்.


நான் பாஜகவை விமர்சனம் செய்தேன். ஏன் செய்தேன் என்றால் தமிழக பாஜக தலைவர்கள் எங்கள் ஆட்சியை விமர்சனம் செய்ததால் நானும் பதில் பேசினேன். மற்றபடி மோடியை குறைகூறவில்லை’’ என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT